அரசியலுக்கு வருவேன் என எதிர்பார்க்கவில்லை - மு.க. அழகிரி
அரசியலுக்கு நான் வருவேன் என எதிர்பார்க்கவில்லை என மு.க.அழகிரி கூறியுள்ளார்.
சென்னை: அரசியலுக்கு வருவேன் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள சென்னை எம்.சி.சி. மேல் நிலைப்பள்ளியில் 1967-ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளியின் முன்னாள் மாணவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி பேசுகையில், என் வாழ்நாளில் இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி நடக்கும் என நான் நினைத்ததே இல்லை. எனது வாழ்வில் அரசியல் உள்ளிட்ட சூழ்நிலைகளில் பல அதிர்ச்சிகளை சந்தித்திருக்கிறேன்.
அவற்றையெல்லாம் கடந்து இன்று உங்கள் முன்னாள் நிற்பதற்கு இங்கு அமர்ந்திருக்கும் எனது ஆசிரியர்களே காரணம். இன்று நீங்கள் கொடுத்திருக்கும் இன்ப அதிர்ச்சி இனி எனக்கு மீண்டும் எப்போது கிடைக்கும்?. இதை யாராலும் தர முடியாது. கபாலி பட வசனத்தில் சொல்ல வேண்டுமானால் இந்த கணம் -மகிழ்ச்சி-.
நமது தாய், தந்தை நம்மை ஆளாக்கியிருக்கலாம். ஆனால் நாம் எங்கிருந்து வந்தோம் யாரால் பயிற்றுவிக்கப்பட்டோம் என்பதை மறக்கவே கூடாது. நான் மத்திய அமைச்சராகி முதல் கையெழுத்துபோடும் போது எனது பள்ளியின் ஆசிரியர்களை நினைவு கூர்ந்தேன் என்றார் அழகிரி.
இந்த நிகழ்ச்சியில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, லண்டன் உள்பட பல வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் உள்பட 250 பேர் கலந்துகொண்டனர்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications