ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தடியடி நடத்த நான் உத்தரவிடவில்லை: பன்னீர்செல்வம் பகீர்
ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது, நான் என் மட்டத்தில் போலீஸ் படையை பயன்படுத்த உத்தரவிடவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்த நான் உத்தரவிடவில்லை என்று, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
டிவி சேனல் பிரத்யேக பேட்டியில் அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தானாக மக்கள் எழுச்சியடைந்தனர். அது செயற்கையானது இல்லை. அதேபோலத்தான் இப்போதுள்ள அரசியல் சூழலுக்கு எதிராகவும் மக்கள் கிளர்ச்சி செய்ய தயாராக உள்ளனர்.

பொதுமக்கள் நடத்திய நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. திரும்பவும் மெரினாவில் மக்கள் கூட தேவையில்லாத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறை உயர் அதிகாரிகளிடம் நான்பேசுகையில், சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதல் கொடுப்பார் என்ற தகவலை மெரினா போராட்டக்காரர்களிடம் தெரிவிக்குமாறு கூறினேன். ஆனால் அங்கு நிலைமை மாறிவிட்டது.
இதையறிந்ததும் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இருக்கின்ற சூழ்நிலையை பொறுத்து காவல்துறை முடிவெடுத்துள்ளது. நான் என் மட்டத்தில் போலீஸ் படையை பயன்படுத்த உத்தரவிடவில்லை. போலீஸ் எடுத்த நடவடிக்கை எதிர்மறையாக சென்றுவிட்டது. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். பன்னீர்செல்வத்திற்கு நல்ல பெயர் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக, தடியடி நடத்த உத்தரவிட்டது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications