தேர்தல் கருத்துகணிப்புகளை எல்லாம் நம்புவது இல்லை: மு.க. ஸ்டாலின்
சென்னை: தேர்தல் கருத்துகணிப்புகளை எல்லாம் தான் நம்புவது இல்லை என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் கோவையில் பிரச்சாரம் செய்துவிட்டு நேற்று காலை விமானம் மூலம் சென்னைக்கு திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், அண்மையில் வெளியான கருத்துகணிப்பில் திமுகவுக்கு வரும் தேர்தலில் சில இடங்களே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர், நான் கருத்துகணிப்புகளை எல்லாம் நம்புவது இல்லை. அதனால் அது பற்றி கவலை இல்லை என்றார். உடனே அவரிடம், ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவில்லையே என்ற செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி தெளிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்றார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications