''4 பேரும் வந்து நீங்க கிங்கா இருங்க, நாங்க கிங்மேக்கரா இருக்கிறோம் என்றார்கள்''.. விஜயகாந்த்
சென்னை: மக்கள் நலக்கூட்டணிக்கு மக்களைப் பிடிக்கும், எனக்கு தெய்வத்தைப் பிடிக்கும் நான் யாரிமும் விலை போகவில்லை. அப்பவும் சரி இப்பவும் சரி மக்களுடன்தான் கூட்டணி வைத்திருக்கிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மக்கள் நலக்கூட்டணி- தேமுதிக கூட்டணி தொகுதி உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து தேமுதிக அலுவலகத்தில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்கள்.

அப்போது பேசிய விஜயகாந்த், அனைவருக்கும் வணக்கம், நான் பொதுவா வந்து இந்த கூட்டத்துல நிறைய பேசுவேன். இன்றைக்கு எனக்கு முன்னதாக நாலு பேரும் நிறைய பேசி விட்டார்கள். நான் என்னை மெதுவாக இனி மாற்றிக்கொள்வேன். படிப்படியாக மாற்றிக்கொள்வேன்.
மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் நான்கு பேர் வந்தார்கள். நீங்க கிங்கா இருங்க, நாங்க கிங்மேக்கரா இருக்கிறோம் என்றார்கள். கூட்டணி ஆட்சி என்று கேட்டார்கள், தாராளமாக அறிவித்துவிடுங்கள் என்று கூறிவிட்டேன்.
பணத்தாசையில் விஜயகாந்த் அங்கே போய்விட்டார், இந்த பக்கம் விலைபோய் விட்டார் என்று எழுதினார்கள். நான் யாரு பக்கமும் விலை போகவில்லை. அன்றே சொன்னேன், தெய்வத்தோடும், மக்களோடுதான் கூட்டணி. தெய்வம் தான் வழிகாட்டும்.
மக்கள் நலக்கூட்டணி தலைவர்களுக்கு தெய்வம் பிடிக்குமா பிடிக்காதா என்று தெரியாது. ஆனால் எனக்கு தெய்வம் பிடிக்கும். நான்கு பேரும் நான்கு விதமான கொள்கை உடையவர்கள் என்று நினைக்காதீர்கள்.
நான்கு பேரும் ஒரே கொள்கையை கொண்டவர்கள். என்னை விட இவர்கள் அனைவரும் மூத்தவர்கள்தான். ஏன் என்னை ஏற்றுக்கொள்கிறார்கள், என்னை ஏற்றுக்கொண்ட அவர்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி.
அதிக நேரம் நான் பேச விரும்பவில்லை. இருந்தாலும் இங்கே வந்து எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி மக்களே. சினிமாவில் வசனம் அந்த பக்கம் இந்த பக்கம் என கேட்டு கேட்டு பேசுவதால்தான் நான் ஒரே பக்கமாக பார்த்து பேச மாட்டேன். பல பக்கம் பார்த்து பேசுவேன்.
எழுதி படித்தால் கீழே குனிய வேண்டியதிருக்கும். அப்போது கத்துவாங்க. கத்துனா எனக்கு கோபம் வரும். இயற்கையான கோபம்தான். அவுங்களுக்கு என்னன்னா விஜயகாந்த் பேச்சை நிறுத்திட்டாரே, அப்படி என்கிற கோபம்.
அதற்குத்தான் என் மனைவி பிரேமலதா சொன்னார்கள். ''இதுக்கே இப்படி கோபப்படுகிறார்களே, ஒருவர் ஐந்து வருடங்களாக பேசாமல் இருந்தார் என்று ஒருவர் கிண்டல் செய்தாரே, அவரே அந்தக் கட்சிக்குப் போயிருக்கிறாரே, அவரை என்னவென்று சொல்வது" என்று கேட்டார்கள்.
அன்றைக்கு முதல்வரைக் கிண்டல் அடித்தவர்தான் இன்றைக்கு கட்சிக்கு போயிருக்கிறார். அதே கட்சிக்குத்தான் போயிருக்கிறார். இன்னொரு விஷயம், என் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அண்ணன் வைகோ இருப்பார். இத்துடன் என் உரையை முடித்துக் கொள்கிறேன். வந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றி. மக்கள் நலக்கூட்டணி தேமுதிக கூட்டணி அமைய பாடுபட்ட அனைவருக்கும் நன்றி வணக்கம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications