குஷ்பு யார் என்று எனக்கு தெரியும்.. என்னிடம் வேண்டாம்.. திருநாவுக்கரசர் 'டோஸ்'
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், கட்சியின் செய்தி தொடர்பாளரும், ஈவிகேஎஸ் இளங்கோவனின் ஆதரவாளருமான குஷ்பு குறித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் அக் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும், ஈவிகேஎஸ் இளங்கோவனின் ஆதரவாளருமான குஷ்பு குறித்து விமர்சித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகில இந்திய காங்கிரசின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் ஆதரவாளர்.

சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு பேட்டித் தந்த குஷ்பு, " தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி செயலற்று கிடக்கிறது. இன்னும் இரண்டு மாதத்தில் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மாற்றப்படுவார் " என ஆரம்பித்து, திருநாவுக்கரசருக்கு எதிராக பல விசயங்களைப் பேசியிருக்கிறார்.
இதனால், திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். குஷ்புவை கண்டிக்கும் விதத்தில் போராட்டங்கள் நடத்தவும்,குஷ்பு வீட்டை முற்றுகையிடவும் முடிவு செய்தனர்.
இதற்கு திருநாவுக்கரசரிடம் அனுமதி கேட்டபோது மறுத்துவிட்டார். இதனால், கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டனர் ஆதரவாளர்கள்.
இந்த நிலையில், காஞ்சி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கலந்துகொண்டார் திருநாவுக்கரசு.
காஞ்சியின் முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் தொடங்கி பேசிய பலரும், தமிழகத்தின் வருங்கால முதல்வர் என திருநாவுக்கரசை வழக்கம் போல புகழ்ந்து தள்ளினர். இறுதியில் பேசிய திருநாவுக்கரசர், பூத் கமிட்டி அமைப்பது தொடங்கி பல ஆலோசனைகளை சொல்லிவிட்டு, தன்னை பற்றி பேட்டியில் தவறாக பேசிய குஷ்புவை கண்டிக்கும் விதத்தில், நீ எங்கிருந்து வந்தாய்? அரசியலுக்கு வருவதற்கு முன்பு என்ன பண்ணிக்கொண்டிருந்தாய்? என ஒருமையில் வறுத்தெடுத்தெடுத்தவர், " உன்னை விட பெரிய ஆளையெல்லாம் பார்த்தவன் நான். என் கிட்டே வேணாம் " என கடுமையாகப் பேசியுள்ளார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications