அதிமுகவில் மட்டும் நான் இருந்திருந்தால்.. காங். தலைவர் திருநாவுக்கரசர் சொல்வதை பாருங்கள்
நான் அதிமுகவில் இருந்திருந்தால் முதல்வராகி இருப்பேன். அப்படி இல்லை என்றாலும் கூட ஓ.பன்னீர்செல்வம் இருந்த இடத்தில் நான் இருந்திருப்பேன். இதற்காக நான் இப்போது வருத்தப்படவில்லை என திருநாவுக்கரசர் தெரிவித
சென்னை: அதிமுகவில் இருந்திருந்தால் நான் முதல்வராகியிருப்பேன் என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:

எம்ஜிஆர் காலத்தில் இருந்தே நான் அரசியலில் இருந்து வருகிறேன். அதன் பிறகு ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்து அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தேன்.
பின்னர் கட்சியிலிருந்து நான் நீக்கப்பட்டேன். நான் அதிமுகவில் இருந்திருந்தால் முதல்வராகி இருப்பேன். அப்படி இல்லை என்றாலும் கூட ஓ.பன்னீர்செல்வம் இருந்த இடத்தில் நான் இருந்திருப்பேன். இதற்காக நான் இப்போது வருத்தப்படவில்லை.
அதேநேரம், இப்போது 150 வருட பாரம்பரிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக உள்ளேன். கக்கன், காமராஜர் இருந்த இடத்தில் நான் இருப்பதை பெருமையாக கருதுகிறேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
பிரதமர் மோடி ரூ.500 மற்றும் ரூ.1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது தவறு என்பது தான் காங்கிரஸ் கட்சியின் கருத்து ஆகும். சரியான திட்டமிடல் இல்லாமல் மோடி அறிவித்து விட்டார். இவ்வாறு தெரிவித்தார்.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications