டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.. சரணடைந்த ஜெயக்குமார் மனு
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டில் தனக்கு தொடர்பில்லை என சைதாபேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்த ஜெயக்குமார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வு முறைகேடு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக சென்னை முகப்பேரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை அறிவித்து அவரது புகைப்படத்தை வெளியிட்டு சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ஜெயக்குமாரை பற்றி தகவல் கொடுத்தால் தக்க சன்மானம் கொடுக்கப்படும் என்றும் சிபிசிஐடி போலீசார் அறிவித்து தேடி வந்தார்கள்.

இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்ட நிலையில் ஜெயக்குமார் மட்டும் நீண்ட நாட்களாக தேடப்படும் குற்றவாளியாக இருந்தார்- இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார்.
ஜெயக்குமார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தனக்கும் டிஎன்பிஎஸ்சி முறைகேட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எந்த ஆதாரமும் இல்லாமல் தன் பெயரை கெடுக்கும் நோக்கில் இந்த வழக்கில் காவல்துறை செயல்படுகிறது.
சிபிசிஐடி காவல்துறையினர் உள்நோக்கத்துடன் தனது புகைப்படத்தை ஊடகங்களில் வெளியிட்டு அவதூறு செய்கிறது. மக்களிடம் நன்மதிப்பை பெற பொய்க்குற்றச்சாட்டுகளை என் மீது காவல்துறை சுமத்தி உள்ளது என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications