முல்லைப்பெரியாரில் புதிய அணைக்கு ஆய்வு... ஒரு தமிழனாக எதிர்க்கிறேன்...பொன்.ராதா
சென்னை: முல்லை பெரியாறு அணை அருகே புதிய கட்டுவதற்கு ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு பா.ஜ.க.வின் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ''தமிழன் என்ற முறையில் மத்திய அரசின் இந்த உத்தரவு ஏற்கக் கூடியது அல்ல
முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் கேரள அரசு, கடந்த மாதம் 11 ஆம் தேதி விண்ணப்பித்திருந்தது. இம்மனுவை ஏற்று முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க.வின் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''தமிழன் என்ற முறையில் மத்திய அரசின் இந்த உத்தரவு ஏற்கக் கூடியது அல்ல. இந்த உத்தரவால் தமிழக மக்கள் பாதிக்கப்படுவார்கள்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications