காவிரி விவகாரம் போராட்டம் திருச்சி கூட்டத்தில் அறிவிக்கப்படும்- தூத்துக்குடி செல்லும் கமல் பேட்டி
காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்துவதை திருச்சியில் அறிவிப்பேன் என நடிகர் கமல் கூறியுள்ளார்.
சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்துவது குறித்து திருச்சியில் அறிவிக்கப்படும் என்று நடிகரும், மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக ஆரம்பத்திலிருந்தே கமல் குரல் கொடுத்து வருகிறார்.

மக்களின் பிரதிநிதியாக என்னுடைய கடமை என்பதால் தூத்துக்குடி போராட்டத்திற்கு செல்ல போவதாகவும், ஸ்டெர்லைட் ஆலை மூட வேண்டும் என்று தானும் வலியுறுத்தப் போவதாகவும் ஏற்கனவே கமல் அறிவித்திருந்தார்.
அதன்படி, தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்க சென்னை விமான நிலையம் வந்திருந்தார் கமல்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் இது என்றார்.
காவிரி விவகாரத்திற்காக மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்துவது நல்ல மாற்றம் என்றார். காவிரி விவகாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நினைப்பதுபோல் அரசியலிலும் மாணவர்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கமல் கேட்டுக்கொண்டார்.
தேவைப்பட்டால் காவிரி விவகாரத்திற்காக மக்கள் நீதி மையம் போராட்டம் நடத்த தயாராக உள்ளதாகவும், காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்துவது குறித்து ஏப்ரல் 4-ல் திருச்சியில் நடக்கும் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்றும் நடிகர் கமலஹாசன் தெரிவித்தார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications