24 வருட அரசுப் பணி.. 23 முறை டிரான்ஸ்பர்.. ஊழலுக்கு எதிராக பாடுபடுவதால்: சகாயம்
சென்னை: கடந்த 24 வருடமாக அரசுப் பணியில் இருந்து வருகிறேன். இதுவரை 23 முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன். ஆனால் தொடர்ந்து ஊழலுக்கு எதிராக போராடி வருகிறேன் என்று கூறியுள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ்.
ஜெயலலிதா கைதுக்கு சில நாட்களுக்கு முன்புதான் சகாயம் பரபரப்பில் தமிழகமே மூழ்கிக் கிடந்தது. சுரங்க ஊழல் தொடர்பான விசாரணையை சகாயம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அடுத்த சில நாட்களில் ஜெயலலிதா சிறைக்குப் போய் விட்டார். இந்த நிலையில் சென்னை வியாசர்பாடியில் நேற்று நடந்த மது ஒழிப்புப் பேரணியில் கலந்து கொண்டு சகாயம் பேசினார்.

சிறு வயதிலேயே
நிகழ்ச்சியில் சகாயம் பேசுகையில், சிறு வயதிலேயே காந்தியின் அகிம்சை கொள்கையை மாணவ, மாணவியர்களுக்கு புகட்ட வேண்டும்.

வளர்ந்ததும் கடைப்பிடிப்பார்கள்
அப்போதுதான் அவர்கள், வளர்ந்து பெரியவர்களாக வரும்போது அந்த கொள்கையை கடைபிடிப்பார்கள்.

23 முறை டிரான்ஸ்பர்
நான் 24 ஆண்டுகளாக அரசுப் பணியில் இருந்து வருகிறேன். பணியின்போது 23 முறை இடமாற்றம் செய்யப்பட்டேன்.

ஊழலை ஒழிக்க பாடுபடுவேன்
ஊழலை ஒழிக்க இதுநாள் வரை பாடுபட்டு வருகிறேன். தொடர்ந்து பாடுபடுவேன்.

மது குடிக்காதீர்கள்
மது குடிப்பதின் மூலம் இளைஞர்கள் கெட்டுப்போவதை தடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் இளைஞர்கள் புதிய சமூகம், புதிய தேசம் என்ற உறுதிமொழியை ஏற்று செயல்பட வேண்டும் என்றார் சகாயம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications