ஆர்.கே.நகர் தேர்தல் ரிசல்ட் வரட்டும், அப்புறம் அதிமுகவுக்கே நான்தான் தலைவி: அடித்து சொல்கிறார் தீபா
இந்த தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக தலைமையை ஏற்று ஜெயலலிதாவின் வழியில் கட்சியை கொண்டு செல்வேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்தார்.
சென்னை: ஆர்கேநகர் தேர்தல் முடிவு வெளியானதும் அதிமுகவுக்கு தலைமையேற்கப்போவது நான்தான் என அடித்துக் கூறியுள்ளார் தீபா.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தீபா நிருபர்களிடம் கூறியதாவது: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் போட்டியிட இந்த தொகுதி மக்கள் தான் காரணம். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

மக்கள்
ஜெயலலிதாவின் வாரிசு யார்? என்பதை தமிழக மக்களுக்கும், அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் இந்த தொகுதி மக்கள் நிரூபிப்பார்கள். இந்த தேர்தல் வெற்றி என் வாழ்க்கையில் ஒரு சரித்திரமாக அமையும்.

அதிமுக தலைமை
அதிமுகவுக்கு நல்ல தலைமை தேவைப்படுகிறது. அது நான் என்பதில் அ.தி.மு.க. தொண்டர்கள் உறுதியாக இருக்கிறார்கள். இந்த தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக தலைமையை ஏற்று ஜெயலலிதாவின் வழியில் கட்சியை கொண்டு செல்வேன்.

சின்னம்
ஆர்.கே.நகர் மக்களிடம் கலந்து பேசியுள்ளேன். ஜெயலலிதா அளித்த வாக்குறுதி அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவேன் என அவர்களுக்கு உறுதியளிக்கிறேன். தேர்தல் கமிஷன் எனக்கு என்ன சின்னம் ஒதுக்குகிறதோ அதில் போட்டியிடுவேன்.

வேட்புமனு தாக்கலை தடுத்தனர்
உரிய நேரத்தில் எனக்கு வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக் கவில்லை. பிற்பகல் 1.30 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வர சொன்னார்கள். ஆனால் அதே நேரத்தில் டி.டி.வி.தினகரன் திட்டமிட்டு வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். எனக்கு மாற்று வேட்பாளர்கள் என்று யாரும் கிடையாது. என்னுடைய உண்மையான தொண்டர்கள் தான் எனக்கு மாற்று வேட்பாளர்கள். இவ்வாறு தீபா கூறினார்.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications