மக்களுக்கு நல்லது செய்யவே போட்டி... என் குரலை நான் சத்தமாக பதிவு செய்வேன் - விஷால்
நான் அரசியல்வாதியாக இன்னும் மாறவில்லை.சினிமாவில் நடப்பது போல ஆர்.கே. நகரில் நடந்துள்ளது என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வர நினைத்தேன். இன்னும் நான் அரசியல்வாதியாக மாறவில்லை. சினிமாவில் நடந்தது போல ஆர்.கே. நகரில் நடந்துள்ளது என்ற கூறியுள்ளார் விஷால்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னிபரிட்சை நிகழ்ச்சியில் பேசிய விஷால்,
என் வேட்புமனுவை தள்ளுபடி செய்தது நிறைய பேருக்கு சந்தோசம். என் மீது எந்த எப்ஐஆரும் இல்லை. ஆனால் திமுக, அதிமுக வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
72வது வேட்புமனுவாக பரிசீலிக்க வேண்டும். ஆனால் 145வது வேட்புமனுவாக என் மனுவை பரிசீலனை செய்தனர். எல்லோருடைய மனுவையும் தேர்தல் அதிகாரியே முடிவு செய்தார். ஆனால் எனக்கு மட்டும் ஏன் வெளியில் போய் பேசினார் என்று தெரியவில்லை.
என்னுடைய புகாரை மனசாட்சிப்படி ஏற்றுக்கொண்டு கையெழுத்து போட்டிருக்கிறார்.
தேர்தல் அதிகாரிகாரியின் அறிவிப்பு வீடியோவில் பதிவாகியுள்ளது. நான் பேட்டி கொடுத்த பின்னர் யாருமே அப்ஜெக்ட் செய்யவில்லை. வீட்டிற்கு போய் விட்டு வருவதற்குள் வேட்புமனுவை தள்ளுபடி செய்து விட்டனர்.

பிரதமர், ஜனாதிபதிக்கு புகார்
72 பேரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. என்னைப்பார்த்து ஏன பயப்படுகிறார்கள்.
தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையர், ஜனாதிபதி, பிரதமருக்கு புகார் அனுப்பியுள்ளேன்.
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தேர்தல் களத்தில் இறங்கினேன். என் மனுவை மட்டும் தள்ளுபடி செய்தது ஏன்?

நான் யாருக்கும் எதிரியில்லை
மதுசூதனன் மீது நான் குற்றச்சாட்டு வைக்கவேயில்லை. அவரை நான் நேரில் பார்த்ததேயில்லை. போனில் பேசியதை வெளியிட்டேன். எதிரியாக நான் யாரையும் பார்க்கவில்லை.

எனக்கு பின்னால் நான்தான்
எனக்கு பின்னால் யாருமே இல்லை. முன்னாள் இருக்கும் மக்களுக்காகவே நான் தேர்தலில் போட்டியிட்டேன். டிடிவி தினகரன் எனக்கு பின்னால் இருந்தால் அதை வெளியே கூறி விடுவேன். கமல்ஹாசன், திமுக என யாருமே என் பின்னால் இல்லை. நானே சுயமாக போட்டியிட முடிவு செய்தேன்.

மக்களுக்கு உதவி செய்வேன்
திடீர் என்று தேர்தல் அறிவித்தார்கள். நான் போட்டியிட முடிவு செய்தேன். உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் போனதால் பல விசயங்கள் நடக்கவில்லை. சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவே தேர்தலில் போட்டி. அரசு பள்ளிகளில் எந்தவித வசதியும் இல்லை. இனிமேல் நடக்கக்கூடாது என்றுதான் போட்டியிடுகிறேன்.

உள்ளுணர்வு சொன்னதை கேட்பேன்
என் குரலை நான் சத்தமாக பதிவு செய்வேன். மக்களுக்கு நல்லது செய்வேன். ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர்தான் பலபேருக்கு தைரியம் வந்துள்ளது என்றால் அது தப்பேயில்லை. நான் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ரசிகன் என்றும் விஷால் கூறினார். என் உள்ளுணர்வு கூறியதை ஏற்று நடக்கிறேன்.

தெலுங்கு மக்களின் வாக்கு
ஆர்.கே. நகரில் இந்திய குடிமகனாக தேர்தலில் நிற்க மனு தாக்கல் செய்தேன். தெலுங்கு பேசும் மக்களின் வாக்குகளை குறிவைத்து நிற்கவில்லை. எல்லா மக்களுக்கும் நல்லது செய்யவே தேர்தலில் நின்றேன். மொழி ரீதியாக என்னை பிரித்து பார்ப்பவர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.

அரசியல் கட்சி
நான் கட்சி தொடங்குவேனா என்பது நேற்று நடந்த சம்பவங்களைப் பார்த்து முடிவெடுத்து விட்டேன். கட்சி ஆரம்பித்து விட்டு அரசியலுக்கு வருவதை விட நேரடியாக களத்தில் இறங்கினேன். யாரை பார்த்தும் நான் பயப்படவில்லை. நான் தைரியமாக களமிறங்குவேன். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்றும் விஷால் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications