For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயக்குமார் ஸ்டைலே தனிதான்... யாரை, யாருடன் ஒப்பிடுகிறார் பாருங்க!

தமிழகத்தில் தேர்தல் என்றால் எப்போதும் போட்டி அதிமுக திமுக இடையேதான் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெயக்குமார் ஸ்டைலே தனிதான்-வீடியோ

    சென்னை : உலகக் கோப்பை கால்பந்தில் மெஸ்ஸி - ரொனால்டோ இடையேதான் போட்டி என்பது போல், தமிழகத்தில் தேர்தல் என்றால் அதிமுக - திமுக இடையே தான் போட்டி என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருக்கிறது திமுக.

    If Football its Messi and Ronaldo and its for Election Always ADMK and DMK

    முன்பு ஒருமுறை பேரவை விதிகள் குழுவைக்கூட்டி ஆளுநர் பற்றி யாரும் பேசக்கூடாது என்று சொன்னது திமுக தான். 1999ம் ஆண்டிலேயே விதிகளைத் திருத்தியது திமுக. ஆனால், இப்போது அதே கொள்கையை மாற்றிக்கொண்டு பேசிவருகிறார்கள்.

    ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது அதிகாரத்திற்கு உட்பட்டே ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். தாங்கள் மூடிய கதவுகளை திமுகவினரே திறக்கச் சொல்கிறார்கள்.

    விரைவில் ஆட்சியைப் பிடிப்போம் என்று கமல்ஹாசன் சொல்லி வருகிறார். உலகக்கோப்பை கால்பந்தில் மெஸ்ஸி - ரொனால்டோ இடையேதான் போட்டி இருக்கும். அதுபோல, தமிழகத்தில் தேர்தல் என்றால் அதிமுக - திமுக இடையே தான் போட்டி. வேறு எவரும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

    ஆட்சியை பிடிப்போம் என்று கமல்ஹாசன் கூறியது பற்றிய கேள்வி பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார் , உலகக்கோப்பை கால்பந்தில் ரொனால்டோ-மெஸ்ஸி இடையேதான் போட்டி. தேர்தல் என்றால் அ.தி.மு.க- தி.மு.க இடையேதான் போட்டி. வேறு யாரும் ஆட்சியை பிடிக்க முடியாது என கூறினார்.

    English summary
    If Football its Messi and Ronaldo and its for Election Always ADMK and DMK says Minister Jayakumar. He also added that Kamalhassan or no one can win in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X