இந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு... சொல்கிறார் முதல்வர் எடப்பாடியார்

இந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த மாதவரத்தில் நடைபெற்ற ஜெயின் சமூகத்தினரின் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அப்போது ஆன்மீகம் தொடர்பாக அவர் பல கருத்துக்களை கூறினார்.

If India is the temple Tamilnadu is the place of god: CM Edappadi Palanisami

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது,
மகான்களைத் தோற்றுவிக்கும் ஞான பூமியாக தமிழ்நாடு உள்ளது. ஞானிகளும்,மகான்களும் உலக நன்மைக்காக தங்களை வருத்திக் கொள்கின்றனர்

உயர்ந்த விஷயங்களை மக்களிடையே பரப்புவதை சமயங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. நல்லெண்ணம், தீங்கு செய்யாமை, கொல்லாமை ஆகியவற்றை சமயங்கள் பரப்புகின்றன.

இந்தியா ஒரு திருக்கோவில் என்றால் அதில் இறைவன் நிறைந்திருக்கும் இடம்தான் தமிழ்நாடு. சமய உணர்வு, தேசிய உணர்வை உள்ளடக்கிய ஞானிகளே இன்றளவும் போற்றப்படுகின்றனர்.

மகான்களின் அறிவுரைப்படி அறவழியில் நடந்தால் தனி மனிதனுக்கு துன்பம் ஏற்படாது இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜெயின் சமூக விழாவில் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+