For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சும்மா இருந்தா பிணத்துக்கு சமம்.. புதிய இயக்கம் தொடங்கிய கையோடு கொந்தளித்த விஷால்!

சும்மா இருந்தால் பிணத்துக்கு சமம் என நடிகர் விஷால் ஆவேசமாக பேசியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    புதிய இயக்கம் தொடங்கிய கையோடு கொந்தளித்த விஷால்!

    சென்னை: வீதியில் நடப்பதை பார்த்துக்கொண்டு சும்மா இருந்தால் பிணத்துக்கு சமம் என நடிகர் விஷால் ஆவேசமாக பேசியுள்ளார்.

    நடிகர் விஷால் தனது ரசிகர் மன்றத்திற்கு "மக்கள் நல இயக்கம்" என பெயர் சூட்டியுள்ளார். இதற்கான கொடி மற்றும் லோகவையும் விஷால் அறிமுகப்படுத்தியுள்ளார்.

    அணி சேர்வோம், அன்பை விதைப்போம் என்ற வாசகம் அவரது லோகோவில் இடம்பெற்றுள்ளது. விஷால் போட்டோ நடுவேயும், இருபக்கமும் அன்னை தெரசா மற்றும் அப்துல் கலாம் ஆகியோர் படங்களும் இடம் பெற்றுள்ளன.

    பிணத்துக்கு சமம்

    பிணத்துக்கு சமம்

    புதிய அமைப்பையும் கட்சியையும் தொடங்கிய கையோடு மிக ஆவேசமாக பேசினார் விஷால். இதைத்தொடர்ந்து விஷால் பேசியதாவது, வீதியில் நடப்பதை பார்த்துவிட்டு சும்மா இருக்க முடியாது, சும்மா இருந்தால் பிணத்துக்கு சமம்.

    அரசியல் தொழிலாக மாறிவிட்டது

    அரசியல் தொழிலாக மாறிவிட்டது

    அரசியல் என்பது மக்கள் பிரச்னையை தீர்ப்பதுதான்; ஆனால் அது ஒரு தொழிலாக மாறிவிட்டது.

    அன்பு, அறிவு

    அன்பு, அறிவு

    நான் வணங்கும் இரண்டு தெய்வங்கள் அன்னை தெரசா மற்றும் அப்துல்கலாம். அன்னை தெரசாவை பார்க்கும் போது அன்பு நினைவுக்கு வரும். அப்துல்கலாமை பார்க்கும் போது அறிவு நியாயபகம் வரும்.

    மதுரை நம் மண்

    மதுரை நம் மண்

    இதைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்களில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், முதலில் தேர்தலுக்கான அறிவிப்பு வரட்டும் என்ற அவர், அறிவிப்பு வந்தால்தான் எதுவும் சொல்ல முடியும். மதுரை நம் மண். இவ்வாறு ஆவேசமாக பேசினார் விஷால்.

    English summary
    Actor Vishal has said that if we be quit after seeing what happens in Society is equal to dead body.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X