மொத்தமாக போயிடும்.. உங்க கிட்ட ரேஷன் கார்ட் இருக்கா? முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்
சென்னை: ரேஷன் அட்டை வைத்து இருப்பவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.
பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் ரேஷன் பொது விநியோக திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் செய்யப்படும் பல்வேறு மாற்றங்கள் தேசிய அளவில் பல மாநிலங்களில் கவனம் பெற தொடங்கி உள்ளன. பிற மாநில அரசுகளும் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் கொண்டு வரப்படும் திட்டங்களை பின்பற்ற தொடங்கி உள்ளனர்.
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசு, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அட்டை ரீதியாக வழங்கப்பட்டது. அட்டையை பொறுத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறி வருகின்றது.

ரேஷன் பொருட்களில் சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. உணவு பொருட்கள் சுத்தமாக கிடைக்க வேண்டும். எடையில் ஏமாற்றம் செய்ய கூடாது என்பதால் பொருட்களை நியாயவிலை கடைகளில் பாக்கெட்டுகள் மூலமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
ரேஷன் புதுமை:
ரேஷன் கடைகளில் பல விஷயங்கள் புதுமையாகிவிட்டன. சமீபத்தில் ரேஷன் கடைகளிலும் இதே போல ஆன்லைன் கட்டணம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது பணமாக செலுத்தாமல் யுபிஐ மூலம் செலுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் சுமார் 2.2 கோடி குடும்ப அட்டைகள் இருக்கிறது. இதன் மூலம் சுமார் 7 கோடி பேர் பயனடைகிறார்கள். எல்லோருக்கும் இந்த புதிய வசதி கொண்டு வரப்படும். அரசின் குறிப்பிட்ட துறைகளில் உள்ள கஜானாவிற்கு நேரடியாக பணம் செல்ல இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது. ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் மானிய விலையில் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த மூன்று மாதங்களில் இந்த மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
அதிரடி அறிவிப்பு:
இன்னொரு பக்கம் ரேஷன் கார்டில் உள்ளவர்களின் பெயர்களுக்கு ஆதார் கார்டு விவரங்களை கொடுக்க வேண்டும் என்ற விதியும் உள்ளது. ஆதார் கார்ட் இப்போது இந்தியாவில் அடிப்படை அடையாள அட்டையாக மாறிவிட்டது. இந்தியாவில் மிக முக்கியமான அடையாள அட்டையாக இந்த ஆதார் அட்டை திகழ்ந்து வருகிறது. பல துறைகளில் சேவைகளை பெற ஆதார் கார்ட் அவசியம் ஆகிவிட்டது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.
இந்த நிலையில் 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு ஆதார் இருக்காது. அதனால் அவர்கள் பெயர்களை ரேஷனில் சேர்க்க ஆதார் அட்டைக்கு பதிலாக பிறப்பு சான்றிதழ் கொடுக்கப்படும். ஆதார் 5 வயதுக்கு பின் கொடுக்கப்பட்டதும் அதன் விவரங்களை கொடுத்து ரேஷன் அட்டையை புதுப்பிக்க வேண்டும்.

இந்த நிலையில் அப்படி செய்யாத பட்சத்தில் இனிமேல் 5 வயது கடந்ததும் ஆதார் விவரம் கொடுக்கப்படாத குழந்தைகள் பெயர் தானாக நீக்கப்படும். இதனால் குடும்ப அட்டையில் ஒருவர் பெயர் நீக்கப்பட்டு அவருக்கான சலுகைகள் போகும். மீண்டும் பெயரை சேர்க்க ஆதார் விவரங்களை கொடுக்க வேண்டும்.
எனவே உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்து.. ஆதார் இல்லாமல் ரேஷன் அட்டையில் பெயர் சேர்க்கப்பட்டு இருந்தால் 5 வயது ஆனவுடன் ஆதார் அட்டை எடுத்து, ரேஷனிலும் அதை அப்டேட் செய்து விடுங்கள். இல்லையென்றால் இனிமேல் 5 வயது கடந்ததும் ஆதார் விவரம் கொடுக்கப்படாத குழந்தைகள் பெயர் தானாக நீக்கப்படும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications