For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊடக தர்மத்தை குழிதோண்டி புதைக்கும் பத்திரிகைகள்: இளவரசி மகள் கிருஷ்ணபிரியா திடீர் ’பொங்கல்’

ஊடக தர்மத்தை பத்திரிகைகள் குழிதோண்டி புதைப்பதாக இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா திடீரென பொங்கியுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஊடக தர்மத்தை பத்திரிகைகள் குழிதோண்டி புதைப்பதாக சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் இளவரசியின் மகளும் வருமான வரி சோதனையில் சிக்கியவருமான கிருஷ்ணப்பிரியா திடீரென சாடியிருக்கிறார்.

சசிகலா சிறைக்குப் போன நிலையிலும் அதிமுக இரண்டாக பிளவுபட்ட நிலையில் அரசியலில் நுழைய ஆழம் பார்த்தவர் கிருஷ்ணப்பிரியா. நீட் தேர்வுக்கு தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பலை, அனிதாவின் மரணம் ஆகியவற்றின் மூலமாக அரசியலுக்குள் நுழைய காலடி எடுத்து வைத்தார் கிருஷ்ணப்பிரியா.

சசியைப் போலவே..

சசியைப் போலவே..

சசிகலாவைப் போலவே நடை, உடை, பேச்சு என அனைத்தையும் ஜெயலலிதாவைப் போல மாற்ரிக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார் கிருஷ்ணப்பிரியா. வருமான வரி சோதனையில் சிக்கிய போதும் கூட மனம் தளராத கிருஷ்ணப்பிரியா அதையும் ஒரு சாதகமான அம்சமாக பார்த்தார்.

தினகரன் கொந்தளிப்பு

தினகரன் கொந்தளிப்பு

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தயக்கமே இல்லாமல் பதிலளித்தார். இந்த நிலையில் ஊடகங்களில் சசிகலாவின் அக்காள் மகன் தினகரன் திடீரென சொத்து விவகாரங்களில் கொந்தளித்திருந்தார்.

பேஸ்புக்கில் கிருஷ்ணபிரியா

பேஸ்புக்கில் கிருஷ்ணபிரியா

இதனைத் தொடர்ந்து தற்போது கிருஷ்ணப்பிரியாவும் கொந்தளிக்க தொடங்கியுள்ளார். இது தொடர்பாக தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கிருஷ்ணப்பிரியா பதிவிட்டுள்ளதாவது:

கேள்வி கேட்பேன்

கேள்வி கேட்பேன்

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பத்திரிக்கை மற்றும் ஊடக தர்மத்தை குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கும் சில பத்திரிக்கையாளர்களிடம் நான் அவசியம் , சில கேள்விக்கணைகளைத் தொடுக்க வேண்டும்.. தொடுப்பேன்

இவ்வாறு கிருஷ்ணப்பிரியா பதிவிட்டுள்ளார்.

English summary
Ilavarasi Daughter Krishnapriya who was under scanner in IT slammed that Medias on her facebook page.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X