29ல் தீவிரவாதி இமாம் அலி நினைவு தினம்: மதுரை, கோவைக்கு வெடிகுண்டு மிரட்டல் எச்சரிக்கை
சென்னை: தீவிரவாதி இமாம் அலியின் நினைவு நாள் வரும் 29ம் தேதி வருகிறது. இதையொட்டி மதுரை மற்றும் கோவைக்கு வெடிகுண்டு மிரட்டல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் சென்று அங்கு இருக்கும் தீவிரவாதிகளிடம் பயிற்சி பெற்றவன் இமாம் அலி. அவனுக்கு சென்னை சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்பு உண்டு. இந்நிலையில் கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் தேதி இமாம் அலி பெங்களூரில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
அவனது நினைவு தினம் வரும் 29ம் தேதி வருகிறது. அன்றைய தினம் தீவிரவாதிகள் மதுரை மற்றும் கோவையில் ஏதாவது தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மதுரை, கோவை போலீசார் தற்போதே உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் வரும் 29ம் தேதி அன்று சென்னையிலும் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட உள்ளனர்.












Click it and Unblock the Notifications