தருமபுரியில் வங்கியில் பணமெடுக்க காத்திருந்த விஏஒ சுருண்டு விழுந்து பலி...
தருமபுரி அருகே வங்கியில் பணம் எடுப்பதற்கு காத்திருந்த ஓய்வுபெற்ற விஏஒ சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி : தருமபுரி மாவட்டம் பென்னாகரம் இந்தியன் வங்கியில் பணம் எடுப்பதற்காக ஓய்வுபெற்ற விஏஒ ஒருவர் காத்திருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவர் அங்கேயே உயிரிழந்தார்.
பென்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்மோகன் ராவ். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரான இவர், இன்று அப்பகுதியில் உள்ள இந்தியன் வங்கிக்கு பணம் எடுக்க சென்றார்.

நீண்டநேரமாக வங்கியில் காத்திருந்த அவர், திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
வங்கி வாசலில் பணமெடுக்க காத்திருந்த முன்னாள் அரசு ஊழியர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் 8ம் தேதியன்று 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததில் இருந்து நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பணம் எடுப்பதற்காக வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். வரிசையில் காத்திருந்தவர்களின் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications