மழையால் வேரோடு சாய்ந்த மரம்... பலமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஊட்டி: ஊட்டி மேட்டுப்பாளையம் சாலையில் மழையின் காரணமாக பெரிய மரம் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பல மணிநேரம் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

ஊட்டியில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக ஊட்டி, மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் குறும்பாடி கொண்டைஊசி வளைவு அருகே பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.

In Ooty Mettupalayam main road tree fallen ad traffic affected

இதனால் அங்கு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை ஊழியர்கள் மரத்தை அறுத்து அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து சீரானது. ஊட்டி நெடுஞ்சாலையில் மழையின் காரணமாக மரங்கள் வீழ்வது தொடர்நிகழ்வாகி வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Ooty Mettupalayam main road tree fallen ad traffic affected. And PWD workers clear the tree and traffic become normal.
Please Wait while comments are loading...