திவாகரன் வீட்டிலும் நாளை சோதனை தொடரும்.. வருமான வரித்துறையினர் தகவல்
திவாகரனுக்கு சொந்தமான கல்லூரியிலும் வீட்டிலும் காலையில் இருந்து சோதனை நடைபெற்று வரும் நிலையில் நாளையும் சோதனை தொடரும் என வருமான வரித்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.
மன்னார்குடி: திவாகரனுக்கு சொந்தமான கல்லூரியிலும் வீட்டிலும் காலையில் இருந்து நடந்து வந்த வருமான வரித்துறை சோதனை முடிவடைந்தது. இந்த நிலையில் நாளையும் சோதனை தொடரும் என வருமான வரித்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுக்க மொத்தம் 190 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். மன்னார்குடியில் மட்டும் மொத்தம் 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மன்னார்குடியில் சசிகலா தம்பி திவாகரன் ஆதிக்கம் செலுத்திவரும் அனைத்து இடங்களிலும் சோதனை நடந்தது.

காலை 7.30 மணிக்கு சரியாக திவாகரனுக்கு சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனையை தொடங்கினர். சுத்தரக்கோட்டையில் இருக்கும் அந்த புகழ்பெற்ற பெண்கள் கல்லூரியில் இன்னும் சோதனை நடைபெறது.
அந்த கல்லூரியில் வேலை பார்க்கும் அன்பு என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. இவர் அந்த கல்லூரி உரிமையாளர் திவாகரனுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார்.
திவாகரனுக்கு தனது கல்லூரியில் ரெய்ட் நடக்கும் விஷயம் தெரியும் முன்பே அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது . 7 மணிக்கு முன்பு தொடங்கிய இந்த சோதனை தற்போதுதான் முடிவடைந்தது. மன்னார்குடி வந்த சோதனை அதிகாரிகளில் பாதி பேர் அங்குதான் இருந்தனர்.
இந்த நிலையில் நாளையும் திவாகரன் வீட்டில் சோதனை நடக்கும் என கூறப்பட்டுள்ளது. இதுவரை திவாகரன் வீட்டில் இருந்து ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்பட்டு இருக்கிறதா என்பது கூறப்படவில்லை. நாளை காலை 6 மணிக்கே மீண்டும் சோதனை தொடங்கும் என கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications