காரைக்குடி பள்ளியில் சுதந்திர தின விழா.. மாணவர்களுக்கு பேச்சு, ஓவியம், மாறு வேடப் போட்டி
காரைக்குடி: காரைக்குடியில் உள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர் நிலைப் பள்ளியில் சுதந்திர தினத்தையொட்டி நேற்று தேசியக் கொடி ஏற்றும் வைபவம் நடந்தது. மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நேற்று சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு காரைக்குடி நகர்மன்றதலைவர் கற்பகம் இளங்கோ அவர்கள் தலைமை ஏற்று தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின சிறப்புரையாற்றினார். தலைமையாசிரியர் பீட்டர்ராஜா வரவேற்புரை ஆற்றினார்.

இவ்விழாவில் பள்ளி மேலாண்மைகுழுத் தலைவர் அழகு சுந்தரி, பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழுத் தலைவர் நாகநாதன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் விடுதலைப் போராட்டவீரர்கள் பற்றி பேசினார்கள். சுதந்திர தினவிழாவையொட்டி பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, மாறுவேடப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நகர்மன்றத் தலைவர் பரிசுகள் வழங்கினார். பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி அவர்கள் நன்றி கூறினார். பட்டதாரி ஆசிரியர் கோமதி அவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications