சென்னையில் பயங்கரம்... நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் பெண் பொறியாளர் குத்திக் கொலை
சென்னை: சென்னையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவரை கத்தியால் குத்திய கொலையாளி தப்பியோடி விட்டான்.
நடைமேடையில் கிடந்த அப்பெண்ணின் உடலை கைப்பற்றி கொலை செய்யப்பட்ட பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என போலீசார் விசாரணை செய்து வந்தனர். விசாரணையில், அப்பெண் சூளைமேட்டைச்சேர்ந்த சுவாதி என்பதும், இன்போசிஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளாராக பணிபுரிந்து வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

சுவாதி, 25 மகேந்திரா டெக் சிட்டியில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மறைமலைநகரில் உள்ள அலுவலகத்திற்கு செல்வதற்காக இன்று காலை 7.30 மணியளவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்த போது, அவரை பின் தொடர்ந்து வந்த மர்மநபர், கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர்.
வீடியோ:
சுவாதியின் கழுத்து மற்றும் முகத்தில் கத்தியால் குத்தி ரத்த வெள்ளத்தில் சாய்த்துவிட்டு கொலையாளி தப்பியோடியது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுவாதியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சுவாதியின் பேக் மற்றும் கைப்பேசியை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சுவாதி கடைசியாக தனது கைப்பேசியில் பேசிய அவருடைய ஆண் நண்பர் காவல் துறையால் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறார்.
சென்னையில் கடந்த ஒரு மாதகாலமாக பட்டப்பகலில் படுகொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. வக்கீல்கள் தொடர்ந்து வெட்டி கொல்லப்பட்டு வந்த நிலையில் ஐடி நிறுவன மென்பொறியாளர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். காலை நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பல பகுதிகளுக்கு புறநகர் ரயிலில் ஏறி செல்வது வழக்கம். இன்று காலையில் நடந்த கொலையால் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் குறைவாக இருப்பதாக பெண் பயணிகள் குற்றம் சட்டியுள்ளனர். முக்கியமாக இந்த ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லை என பெண் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications