உடலில்தான் காயம், மனதில் அல்ல - தீக்காயத்திலும் விடாமல் தேர்வு எழுதிய மாணவி
மதுரை: உடலில் தீக்காயம் பட்டு மருத்துவமனையில் சேர்ந்திருந்த பொழுதிலும் தளராமல் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி எல்லாரையும் பிரமிக்க வைத்துள்ளார்.
மதுரை ஊமச்சிக்குளம் அருகே உள்ள சின்னபட்டியை சேர்ந்த சலவைத் தொழிலாளி கஜேந்திரன். இவரது மகள் சுவாதிகா. இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
தற்போது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் நேற்று இரவு மாணவி சுவாதிகா தனது குடிசை வீட்டில் உட்கார்ந்து சிம்னி விளக்கு வெளிச்சத்தில் படித்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரது கால், சிம்னி விளக்கில் பட்டு கீழே கவிழ்ந்தது. இதில் மண்எண்ணை சிதறி தீ பிடித்தது. இந்த தீ மாணவி சுவாதிகா உடையில் பற்றி எரிந்தது. இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது.
உடலில் தீ பிடித்ததும் சுவாதிகா கூச்சல் போட்டு அலறினார். உடனே அவரது பெற்றோர் ஓடி வந்து தீயை அணைத்தனர். தீக்காயம் அடைந்த சுவாதிகாவை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
மாணவி சுவாதிகா படிப்பில் சிறந்து விளங்கினார். தீக்காயம் ஏற்பட்டதால் தன்னால் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டு விடுமே என்று கவலையடைந்தார். இதுகுறித்த தகவல் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியத்துக்கு தெரியவந்தது. உடனே அவர் மாணவி மருத்துவமனையில் இருந்தவாறே உதவியாளர் ஒருவர் உதவியுடன் தேர்வு எழுத சிறப்பு அனுமதி வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து இன்று ஆங்கிலம் 2 ஆம் தாளை மாணவி சுவாதிகா ஆஸ்பத்திரியில் இருந்தவாரே உதவியாளர் உதவியுடன் எழுதினார்.முதன்மை கல்வி அதிகாரி அமுதவல்லி மேற்பார்வையில் இந்த தேர்வு நடைபெற்றது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications