For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் இணையதள சேவை தொடங்க வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர்!

தூத்துக்குடியில் தற்போது அமைதி திரும்பியிருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    இன்டர்நெட் சேவை முடக்கம் | தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மாற்றம்- வீடியோ

    தூத்துக்குடி: தூத்துக்குடியில் தற்போது அமைதி திரும்பியிருப்பதாகவும், இன்று மாலைக்குள் இணையதள சேவை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டியளித்தார். அப்போது அவர் பேசும்போது, தூத்துக்குடியில் தற்போது அமைதி திரும்பியிருப்பதாக தெரிவித்தார்.

    Internet service is likely to resume today evening: Tutucorin District Collector

    துப்பாக்கி சூட்டையடுத்து நேற்றுமுன்தினம் இணையதள சேவை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதனை மீண்டும் தொடங்க அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும், அதனால் இன்று மாலைக்குள் இணையதள சேவை தொடங்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

    தொடர்ந்து, 4 இடங்களில் ஆவின் நிறுவனம் மூலமாக நேரடியாக பால் தட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி மாவட்டத்தில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்புவதாகவும் தெரிவித்தார்.

    English summary
    District Collector said that the situation has now returned to Tuticorin. He added that the internet service will be launched this evening.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X