அப்படின்னா ஆட்சியை கலைக்க சொல்கிறாரா திவாகரன்?

19 எம்.எல்.ஏ.கள் கோரிக்கையை ஏற்று ஆளுநர் சட்டபடியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் மாவட்ட செயலாளர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது, இது தொடரும் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் நீக்கியுள்ளார்.

அதிமுகவில் ஆபரேசன்கள் தொடரும் என்று கூறிய டிடிவி தினகரன், கட்சிப்பொறுப்பில் இருந்த பலரின் பதவியை பறித்துள்ளார். கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விடுவிப்பு. கரூர் மாவட்ட செயலாளராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக ஏழுமலை எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளராக எம்எல்ஏ செந்தமிழன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் காமராஜ் நீக்கம்; புதிய செயலாளராக எஸ். காமராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர் கே.சி.வீரமணி

அமைச்சர் கே.சி.வீரமணி

வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் கே.சி.வீரமணி விடுவிக்கப்பட்டு புதிய செயலாளராக எம்எல்ஏ பாலசுப்பிரமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் வைரமுத்து விடுவிப்பு; புதிய செயலாளராக பரணி கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சுதா பரமசிவன்

சுதா பரமசிவன்

காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலாளராக எம்எல்ஏ கோதண்டபாணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் விடுவிக்கப்பட்டு, திருவான்மியூர் முருகன், குடவாசல் ராஜேந்திரன் மற்றும் கல்லூர் வேலாயுதம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முதல்வர் மீது நம்பிக்கை இல்லை

முதல்வர் மீது நம்பிக்கை இல்லை

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று 19 எம்எல்ஏக்கள் தனித்தனியாக கடிதம் கொடுத்துள்ளனர். இதனையடுத்து தற்போதைய அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக எதிர்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். அதே கருத்தைத்தான் இப்போது சசிகலா குடும்பத்தினரும் கூறி வருகின்றனர்.

சசிகலா ஆதரவு பெற்ற

சசிகலா ஆதரவு பெற்ற

சசிகலா ஆதரவு பெற்ற ஒருவரைத்தான் முதல்வராக்க வேண்டும் என்று கூறி வருகிறார் திவாகரன். கடந்த இரு தினங்களாக தினகரன் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. திவாகரன்தான் சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசி வருகிறார்.

ஆளுநர் நடவடிக்கை தேவை

ஆளுநர் நடவடிக்கை தேவை

இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் மாவட்ட செயலாளர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது, இது தொடரும் என கூறியுள்ளார். 19 எம்.எல்.ஏ.கள் கோரிக்கையை ஏற்று ஆளுநர் சட்டபடியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திவாகரன் தெவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+