குஷ்பு என்ன அவ்வளவு பெரிய தலைவரா? ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறீங்க? திருநாவுக்கரசர் 'டென்ஷன்'
ஏன் எப்போது பார்த்தாலும் குஷ்பு குறித்து கேள்வி கேட்கிறீர்கள் என்று திருநாவுக்கரசர் பத்திரிகையாளர் சந்திப்பில் அதிருப்தி அடைந்துள்ளார்.
சென்னை : குஷ்பு என்ன அவ்வளவு பெரிய தலைவரா ? ஏன் எப்போது பார்த்தாலும் அவரைப்பற்றியே கேள்வி கேட்கிறீர்கள் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன் கட்சியின் அமைப்புப் பொதுச்செயலாளர்கள் அசோக் கெலாட், முகுல்வாஸ்னிக் ஆகியோரோடு கட்சியை பலப்படுத்துவது குறித்து உரையாடி உள்ளோம்.

தமிழகத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் ஆய்வு கண்டிக்கத்தக்கது. ஆளுநர் என்பவர் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே ஒரு நல்ல பாலமாக இருந்து, மாநிலத்துக்குத் தேவையான நிதி கிடைக்க உதவி செய்ய வேண்டும்.
அதை விடுத்து அவர் ஊர் ஊராக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதைக் குறைத்துக்கொள்வது ஆளுநருக்கு நல்லது. நான் தலைமையேற்ற பிறகு கட்சியில் எந்தப் பிரச்னையும் இல்லை.
குஷ்புவிற்கே ஊடகங்கள் முக்கியத்துவம் தந்து கேள்வி கேட்கிறார்கள். குஷ்பு என்ன அவ்வுளவு பெரிய தலைவரா? எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications