மங்கள்யானில் வெற்றிகரமான முதற்கட்ட திருத்தம்: பேஸ்புக்கில் இஸ்ரோ தகவல்
சென்னை: செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலத்தின் சுற்றுப்பயணத்தில் முதல்கட்ட சுற்றுப்பாதையில் திருத்தங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது இஸ்ரோ.
கடந்த மாதம் இந்தியாவின் சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக மங்கள்யான் என்ற விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது. இதன் மூலம், செவ்வாய் கிரகத்தை ஆராய விண்கலம் அனுப்பிய முதல் ஆசிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
தொடர்ந்து மங்கள்யானின் செயல்பாடுகளைக் கவனித்து வரும் இஸ்ரோ, இன்று அதன் முதல் சுற்றுப்பாதை திருத்தத்தை வெற்றிக்கரமாக செய்து முடித்துள்ளதாக பேஸ்புக்கில் தகவல் வெளியிட்டுள்ளது.

முதல்கட்ட திருத்தம்....
தற்போது மங்கள்யான் விண்கலம் சுமார் 2.9 பில்லியன் கிலோமீட்டருக்கு அப்பால் சென்றுகொண்டிருக்கும் நிலையில் இன்று காலை சரியாக 6.30 மணியளவில் 22 நியூட்டன் த்ரஸ்ட்டர் கொண்ட தாக்குதலை நடத்தி விணகலத்தின் சுற்றுப்பயணத்தின் திருத்தங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளது இஸ்ரோ.

சரியான இலக்கு....
இந்நடவடிக்கையின் காரணமாக விண்கலம் செவ்வாய் கிரகத்தின் இலக்கை நோக்கிய தனது பயணத்தில் மிகச்சரியாக செல்லும்படி வெற்றிகரமான மாற்றங்கள் செய்யபட்டுள்ளன.

பேஸ்புக் பக்கத்தில்....
இது குறித்து தனது பேஸ்புக் பகக்த்தில் இஸ்ரோ தெரிவித்திருப்பதாவது, ‘டிசம்பர் 1-ந் தேதி முதல் தங்கள் வல்லுநர்கள் விண்கலத்தின் செயல்பாடுகளையும், வேகத்தையும், அதன் பாதையையும் அவதானித்து வந்தனர். அதில் எப்படிப்பட்ட திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என முடிவெடுத்து அதை இன்று வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளனர்' எனக் கூறப் பட்டுள்ளது.

வெகு தொலைவில்....
மேலும், 20.9 லட்சம் கிலோமீட்டருக்கு அப்பால் விண்கலம் சென்றுகொண்டிருக்கும் நிலையில் அதிலுள்ள கணிணிக்கும், இஸ்ரோவுக்கும் விண்கலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பான தகவல்கள் 20 நொடிகளில் பரிமாறிக்கொள்ளப்பட்டதாகவும் பெருமையுடன் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.

மொத்தம் 4 கட்ட திருத்தங்கள்....
மொத்தம் நான்கு கட்ட பாதை மாற்ற திருத்தங்கள் செய்யத் திட்டமிடப் பட்டுள்ள நிலையில், இன்று முதற்கட்ட திருத்தங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications