நெல்லையைச் சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் சென்னையில் தற்கொலை– காரணம் என்ன?
சென்னை: பல்லாவரத்தில் நெல்லையைச் சேர்ந்த கம்ப்யூட்டர் எஞ்சினியர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டம் தென்காசி பாடியநல்லூரைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் சங்கரரமணன் பி.இ பட்டதாரி. சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் எஞ்சினியராக வேலை பார்த்து வந்தார்.

நண்பர்கள் வினோத், சுப்பிரமணி ஆகியோருடன் சென்னை பழைய பல்லாவரம் துரைக்கண்ணு சாலையில் அறை எடுத்து தங்கி வேலை பார்த்து வந்தார்.
நேற்றுமுன்தினம் இரவு நண்பர்கள் இருவரும் வெளியில் சென்ற சமயத்தில், குளியல் அறையில் உள்ள வெண்டிலேட்டர் ஜன்னலில் தூக்குப்போட்டு சங்கரரமணன் தற்கொலை செய்து கொண்டார். நள்ளிரவில் வீட்டிற்கு வந்த நண்பர்கள் குளியல் அறை உள்பக்கம் பூட்டப்பட்டு இருப்பதை அறிந்து நீண்ட நேரமாக கதவை தட்டினர்.
ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து பார்த்தபோது சங்கரரமணன் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் அவர் இறந்ததை உறுதி செய்தனர்.
பல்லாவரம் போலீசார் சங்கரரமணன் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை.
சில நாட்களுக்கு முன்பே அவர் தன்னுடைய பேஸ் புக் பக்கத்தை ரத்து செய்து விட்டார். அதன்பின்னர் நண்பர்களுடன் சரியாக பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். இந்தநிலையில் நண்பர்கள் வெளியில் சென்றபோது தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications