அவமானம், அவமானம், மாநாட்டில் பெண்களை குத்தாட்டம் போட வைத்தது தமிழகத்திற்கு அவமானம்: ஈ.வி.கே.எஸ்.
நாகை: சென்னையில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெண்களை குத்தாட்டம் போட வைத்தது தமிழகத்திற்கு அவமானம் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வேதாரண்யத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சென்னையில் இரண்டு நாட்களாக நடந்தது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு இல்லை. அது அதிமுக மாநாடு ஆகும். விமான நிலையத்தில் இருந்து மாநாடு நடந்த இடம் வரை வழி எங்கும் சாலையின் இருபுறங்களிலும் அதிமுக கொடிகளும், பேனர்களும் தான் வைக்கப்பட்டிருந்தன.

மாநாட்டில் பெண்களை விட்டு குத்தாட்டம் போட வைத்தது தமிழகத்திற்கே அவமானம் ஆகும். தொழில் துவங்குபவர்களுக்கு தடையில்லா மின்சாரம் அளிக்க வேண்டும். 24 மணிநேரமும் மின்சாரம் அளிப்போம் என்றால் மட்டும் போதாதது. அதை எப்படி அளிப்பீர்கள் என்றும் தெரிவிக்க வேண்டும்.

நான் ஏன் அப்படி கூறுகிறேன் என்றால் தமிழகத்தில் இன்னும் பல இடங்களில் மின்வெட்டு இருக்கத் தான் செய்கிறது. நிலங்களை அளிக்கையில் விவசாயிகள் பாதிக்காத வகையில் அளிக்க முடியும் என்பதையும் அரசு கூற வேண்டும்.
தொழில் துவங்க வருபவர்களிடம் லஞ்சம் வாங்க மாட்டோம் என அதிமுக அரசு வாக்குறுதி அளிக்க வேண்டும் என்றார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications