வாவ்.. பாஜகவை விட தீபாம்மாவுக்கு கூட்டம் செமையா அள்ளுதே!
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சேலத்தில் ஜெ. தீபா பேரவை சார்பில் நடந்த கூட்டத்தில் பாஜகவை விட அதிக கூட்டத்தை கூட்டி அசர வைத்துவிட்டனர் கட்சியினர்.
Recommended Video

சேலம் : ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சேலத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஜெ. தீபா பேரவையின் கூட்டத்தில் அமோக வரவேற்பு கிடைத்தது. ஜெ. தீபா கட்சி தொடங்கி ஓராண்டாகிய நிலையில் அவர் அரசியலில் தீவிரமாக செயல்படவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில் அவரின் கூட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடியுள்ளது ஆச்சரியத்தை தருகிறது.
ஜெயலலிதாவின் திடீர் மரணத்தையடுத்து அதிமுகவை அவரின் அண்ணன் மகளான ஜெ. தீபா கைப்பற்றுவார் என்று பேச்சுகள் எழுந்தன. ஜெ. தீபாவை முன்வைத்து அதிமுகவினர் இயக்கங்களையும் தொடங்கினர், ஆனால் அரசியலில் திடமாக இல்லாத தீபா முதலில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தார். எனினும் தொடர்ந்து அவருடன் செயல்படாமல் கடந்த பிப்ரவரி 14ம் தேதி தனியான பேரவை ஒன்றை அறிவித்தார்.
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்று தனது கட்சிக்கு பெயர் வைத்தார் தீபா. பின்னர் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட போது அஇஅதிமுக ஜெ. தீபா அணி என்பதையும் தன்னுடைய பேரவையின் அடைமொழியாக சேர்த்துக் கொண்டார்.

தீபாவின் செல்வாக்கு சரிவு
ஜெ. தீபா அரசியல் கட்சி தொடங்கினாலும் அவருடைய குடும்ப விவகாரம், நண்பரும் ஓட்டுனருமான ராஜா விகாரத்தாலும், பொது இடத்தில் அநாகரிமாக பேசியதாலும் அவர் மீதான செல்வாக்கு சரிந்தது. அரசியலிலும் எதிர்பார்த்த அளவிற்கு தீபா செயல்படவில்லை என்ற வாதம் எழுந்தது.

ஓராண்டில் முன்னேற்றம் இல்லை
2வது முறை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நடைபெற்ற போது வேட்புமனுவே நிராகரிக்கப்பட்ட போது அதற்கு சரியான நடவடிக்கையை தீபா எடுக்கவில்லை என்றும் கட்சியினர் கருதினர். ஓராண்டு நிறைவில் தீபாவின் கட்சி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை என்பதே கட்சியினரின் புலம்பலாக இருந்தது.

தீபா சூறாவளி பயணம்
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி முதல் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விஷயங்களை தீபா தொடங்கியுள்ளார். கடலூரில் இந்த கூட்டம் தொடங்கியது.

கூட்டம் அள்ளிவிட்டது
இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் கட்சியினரின் கூட்டம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விட்டது. சேலம் கூட்டத்தில் பேசிய ஜெ. தீபா ஜெயலலிதா மரணம் குறித்த ஆணையத்தின் விசாரணை மக்களை ஏமாற்றும் செயல். அவரின் மரணத்தில் உள்ள மர்மம் விலக வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் தீபா வலியுறுத்தினார்.

கட்சியினர் உறுதி
ஜெ. தீபாவின் கூட்டத்திற்கு தேசிய கட்சியான பாஜக தமிழகத்தில் கூட்டும் கூட்டத்திற்கு சேரும் ஆட்களை விட அதிக கூட்டம் கூடி இருக்கிறது. இதே வேகத்தில் செயல்பட்டால் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்றுவிடலாம் என்ற குஷியில் இருக்கின்றனர் பேரவையைச் சேர்ந்தவர்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications