ஜல்லிக்கட்டு புதிய தேதிகள்: அவனியாபுரம் பிப்.5, பாலமேடு பிப். 9, அலங்காநல்லூர் பிப்ரவரி 10

அவனியாபுரத்தில் பிப்ரவரி 5ம் தேதியும் பாலமேட்டில் பிப்ரவரி 9ம் தேதியும், அலங்காநல்லூரில் 10ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது. முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்த பின்னர் விழாக்குழு இதனை அறிவ

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்தப் பின்னர் ஜல்லிக்கட்டு நடக்கும் தேதிகள் விழாக் குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் இருந்த சூழலில் ஜல்லிக்கட்டுக்கான பெரும் புரட்சியே தமிழகத்தில் நடைபெற்றது. இதனையடுத்து, தமிழக அரசு சட்டத்தை இயற்றி ஜல்லிக்கட்டு நடத்த வழிவகைகளை செய்துள்ளது.

Jallikattu to be held at Avaniapuram on Feb 5, Palamedu on Feb 9

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த விழாக்குழுவினர் முடிவெத்திருந்தனர். விழாக் குழுவினர் தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை இன்று சந்தித்து பேசிய பின்னர் தேதிகளை அறிவித்தனர்.

அதன்படி, அவனியாபுரத்தில் பிப்ரவரி 5ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. பாலமேட்டில் பிப்ரவரி 9ம் தேதியும், அலங்காநல்லூரில் பிப்ரவரி 10ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என விழாக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை விழாக்குழுவினர் சந்தித்த போது, அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க வருமாறு விழாக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

முன்னதாக, அலங்காநல்லூரில் பிப்ரவரி1ம் தேதியும், பாலமேட்டில் பிப்ரவரி 2ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த ஜல்லிக்கட்டு விழாக் குழு முடிவு செய்திருந்த நிலையில், முதல்வரை சந்தித்த பின்னர் தேதி அறிவிப்பதாக கூறி ஜல்லிக்கட்டுக்கான தேதி ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+