மெரீனா நோக்கி பேரணியாக வந்தவர்களை ஓட ஓட விரட்டி அடித்த போலீஸ்
ராயப்பேட்டை, திருவல்லிக்கேணியில் இருந்து மெரீனாவை நோக்கி பேரணியாக வந்த இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் காயமடைந்த பலர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஒருவார காலமாக மாணவர்கள் போரடி வருகின்றனர். அவசர சட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறி போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்று போலீசார் கோரிக்கை விடுத்தனர்
சட்ட முன்வடிவு நகலையும் மாணவர்களுக்கு அளித்தனர். ஆனாலும் போலீசாரின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர். இதனையடுத்து மாணவர்களை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். வலுகட்டாயமாக அகற்றி வரும் போலீசுடன் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல மறுத்து கடலை நோக்கி இளைஞர்கள் சென்றனர்.
#JallikattuForever #jallikattu #JallikattuProtests pic.twitter.com/iEjKDT7APv
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) January 23, 2017
அங்கே அப்துல் கலாம் படத்தை பிடித்தபடி கைகளை பிடித்துக்கொண்டு நடத்தி வருகின்றனர். மெரீனாவில் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் இருந்து ஏராளமானோர் மெரீனாவை நோக்கி பேரணியாக சென்றனர். அனைத்து பகுதிகளிலும் போலீசார் தடுப்புகளை வைத்து பேரணியாக வந்தவர்களை தடுத்தனர். இதில் சிலர் மாணவர்கள் சிலர் போலீஸ் மீது தாக்கியதாக தெரிகிறது. இதனையடுத்து மாணவர்கள், போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர் இதில் பலர் காயமடைந்தனர்.
அவ்வை சண்முகம் சாலையில் பேரணியாக வந்தவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி கலைத்து தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.











Click it and Unblock the Notifications