தடுக்காதே...தடுக்காதே... ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடு - திமுகவினர் முழக்கம்
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி மாநிலம் முழுவதும் திமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான திமுகவினர
சென்னை: மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று திமுக சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் நடைபெற்றது.
உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்துள்ளதால் கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை.

இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வழக்கில் உடனடியாக தீர்ப்பளிக்க முடியாது என்று நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து விட்டனர்.
இதனையடுத்து ஜல்லிக்கட்டு நடைபெற அனுமதி கிடைக்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கையும் பொய்த்துப் போனது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
திமுக சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது மத்திய அரசே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடு, மாநில அரசே ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடு என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு என்றும் அதை தடை செய்யும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் திமுகவினர் முழக்கமிட்டனர்.
திருச்சி, திருவண்ணாமலை, ஈரோடு, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான திமுகவினர் பங்கேற்றனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications