Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜல்லிக்கட்டு புரட்சி.. புதிதாக உருவாகியது “என் தேசம் என் உரிமை கட்சி”

ஜல்லிக்கட்டு இளைஞர்களின் புதிய அரசியல் கட்சிக்கு “என் தேசம் என் உரிமை கட்சி” என்று பெயரிட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டு உரிமைக்காக போராடிய இளைஞர்கள் இணைந்து "என் தேசம் என் உரிமை கட்சி" என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்க தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் யுக புரட்சியை நடத்தினார்கள். சென்னை மெரினா கடற்கரையில் கூடிய இளைஞர் பட்டாளம் நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது. இளைஞர்கள் நினைத்தால் சாதிப்பார்கள் என்று நிரூபித்துக் காட்டினார்கள்.

Jallikattu: Youth starts new political party in chennai

அதன் விளைவால் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் தமிழக அரசு ஜல்லிக்கட்டு சட்டம் இயற்றியது. அரசிதழிலும் அந்த சட்டம் வெளியிடப்பட்டது. இதையடுத்து மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்பட தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் உற்சாகமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் புதிதாக அரசியல் கட்சி தொடங்குவது பற்றி சமூக வலைதளங்களில் விவாதித்தனர். அதன்படி சென்னையில் இன்று கட்சியை தொடங்க முடிவு செய்தனர். அரும்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் கட்சி தொடக்க விழா சனிக்கிழமை நடந்தது.

இதற்காக சென்னை மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்கள் திரண்டு வந்தனர். ஐ.டி. துறையில் வேலை பார்ப்பவர்கள், வியாபாரத் துறையில் இருப்பவர்கள், பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்களும் கலந்து கொண்டனர்.

புதிய அரசியல் கட்சிக்கு "என் தேசம் என் உரிமை கட்சி" என்று பெயரிட்டுள்ளனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் எபினேசர், சத்யா, பிரவீணா, சுகன்யா, கார்த்தி, சுதந்திர தேவி, பிரகாஷ், பிரசாத் ஆகியோர் கட்சியின் பெயரை அறிவித்தனர்.

அதைத் தொடர்ந்து கட்சி கொடியையும் அறிமுகம் செய்தனர். தேசிய கொடியின் வண்ணமும், கொடியின் நடுவில் இளைஞர் ஒருவர் அடிமை சங்கிலியை உடைத்தது போன்ற படமும் இடம்பெற்றுள்ளது.

புதிய கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை தொடங்கியதும் பலர் ஆர்வத்துடன் வந்து சேர்ந்தனர். உறுப்பினராக சேருவதற்கு 10 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். நிர்வாகிகளாக வர விரும்புபவர்கள் அதற்காக ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். நிர்வாகிகளாக விரும்புபவர்களுக்கு தனி தேர்வு வைத்திருந்தனர். அதற்காக ஒரு பெரிய அரங்கில் 4 குழுவினர் அமர்ந்திருந்தனர். அந்த குழுவினர் நிர்வாகியாக விரும்பியவர்களிடம் கேள்வி கேட்டனர்.

உங்கள் பகுதியில் நீங்கள் எந்த அளவுக்கு பிரபலம் ஆனவர்? ஊழல் அற்ற தமிழ்நாட்டை உருவாக்க செய்ய வேண்டிய பணிகள் என்ன? நமது கட்சியை நிலைப்படுத்தவும் பிரபலப்படுத்தவும் நீங்கள் சொல்லும் 5 வழிகள் என்ன?

விவசாயிகள் நலனுக்காக நாம் என்ன செய்ய வேண்டும்? பெண்களின் பாதுகாப்பை உயர்த்துவதிலும், அதிகாரப் பதிவிலும் உங்களது யோசனைகள் என்ன? இளைஞர்களின் வேலை வாய்ப்பை எவ்வாறு அதிகரிப்பது? இப்போதுள்ள சூழ்நிலையில் ஒரு சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றால் நீங்கள் எந்த சட்டத்தை மாற்றியமைப்பீர்கள்? மேற்கண்ட 7 கேள்விகளுக்கும் அவர்கள் சொல்லும் பதிலை கம்ப்யூட்டர்களில் பதிவு செய்து கொண்டனர். இளைஞர்களின் எழுச்சி அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் தற்போது ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+