ஒய்.ஜி.மகேந்திரன் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காதது ஏன்?... ஜவாஹிருல்லா கேள்வி
சென்னை: மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேஸ்புக்கில் பதிவிட்ட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மனிதநேயம் உள்ள மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்த இளம் பெண் சுவாதி கொலையில், கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் ராம்குமார், செங்கோட்டை அருகே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யும்போது தற்கொலைக்கும் முயன்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒரு பொது இடத்தில் வைத்து, காலைப் பொழுதில் வேலைக்குப் புறப்பட்ட இளம் பெண்ணை மிகக் கொடூரமாக ஒரு மனித மிருகம் கொன்றுள்ளதை மனசாட்சியுள்ள எவராலும் ஏற்க முடியாது. இந்தக் கொடூரப் படுகொலையை அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் கண்டித்துள்ளன.
கொலையாளியைப் பற்றிய துப்பு கிடைக்காமல், ஒரு வார காலமாக காவல்துறை மிகத் தீவிரமான முறையில் மிகச் சிக்கலான புலனாய்வு முயற்சிகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் போது, சுவாதி என்ற 'உயர் சாதிப்' பெண்ணை பிலால் மாலிக் என்ற மிருகம் கொன்றுள்ளதாகவும், கொலையுண்டவர் பிராமணப் பெண் என்பதால் தமிழகத்தில் மயான அமைதி நிலவுவதாகவும், யாருமே கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும், நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ், திராவிட இயக்கம், பொது உடமை இயக்கம், தலித் இயக்கம் என அனைத்துத் தரப்பையும் கொச்சைப்படுத்தியும் பதிவிட்டுள்ளார்.
சுவாதி தலித்தாக இருந்திருந்தால், ராகுல் ஓடிவந்திருப்பார், ஊடகங்கள் 24 மணிநேரமும் தொடர்ந்து ஒப்பாரி வைத்து இருக்கும், தலித் இயக்கங்கள் மறியல் போராட்டம் என பொங்கியிருப்பார்கள். திராவிட அரசியல் பொறுக்கிகள் தாண்டவம் ஆடியிருப்பார்கள். காமரேட்டு கயவர்கள், மாதர் சங்கங்கள் ஓலமிட்டிருப்பார்கள் என்று மிகவும் அருவறுக்கத்தக்க நடையில், ஒய்.ஜி.மகேந்திரன் பதிவிட்டுள்ளார்.
சுவாதியின் கொடூரக் கொலையால் தமிழகத்தில் மிகப்பெரிய கோப அலை உருவாகியுள்ள சூழலில், அதை முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராகத் திருப்பிவிடும் கடைந்தெடுத்த கயமைத்தனத்தை ஒய்.ஜி. மகேந்திரன் செய்துள்ளார். கொலையாளி பிலால் மாலிக்தான் என்று இவர் எப்படிக் கண்டுபிடித்தார். ஏன் சமூக ஊடகங்களில் பரப்பினார்? தமிழகத்தின் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் கலவரத்தைத் தூண்டிவிடும் கருத்தை வெளியிட்ட ஒய்.ஜி.மகேந்திரன் மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. ஒய்.ஜி. மகேந்திரன் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? எடுக்கப்போகிறது என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
வதந்திகள் மூலம் கலவரம் வளர்த்து, நாட்டின் அமைதியைக் குலைத்து அரசியல் லாபம் அடைவது சங்பரிவாரத்திற்கு கைவந்த கலையாகும். மாட்டுக்கறி வைத்திருந்தார் என அஹ்லாக்கைக் கொன்றது. முஸாஃபர் நகர் முஸ்லிம்களை நிர்மூலமாக்கியது. கைரானாவில் இந்துக்களை முஸ்லிம்கள் ஊரைவிட்டே வெளியேற்றி விட்டார்கள் என்று பரப்பியது ஆகியவை இதற்கு உதாரணங்கள்.
சுவாதி கொலையின் மூலம் எழுந்த பொதுமக்களின் கோபத்தை, முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராகத் திருப்பிவிட கயமைத்தனமிக்க முயற்சியில் இறங்கிய நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நியாயம் கேட்கும் வீரிய போராட்டங்களில் இறங்க நேரிடும் என்று எச்சரிக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications