ஜெ.வுக்கு எதிரான தீ்ர்ப்பு எதிரோலி - தமிழகம் முழுவதும் கலெக்டர், எஸ்பிக்கள் உஷார்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசாரும், கலெக்டர்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீது கடந்த 18 வருடங்களாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் நேற்று பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் அசாதாரண நிலை நிலவுவதால் அனைத்து பகுதிகளிலும் சட்டம் ஓழுங்கை நிலை நாட்டவும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு தேவையான அத்திவாசிய பொருட்களான பால், காய்கறி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள், பஸ் போக்குவரத்து ஆகியவற்றை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு வலியுறுத்தப் பட்டுள்ளதாம்.

இதனால், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள், பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆர்டிஓக்கள் அனைத்து தாலுக்காவிலும், தாசில்தார்கள், தலைமை இடத்தில் தங்கி இருக்கவும், விஏஓக்கள், ஆர்ஐக்கள் தங்கள் பணியாற்றும் இடத்தில் இருக்கவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

வருவாய் துறையினர், போலீசார் அனைவரின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விடுமுறையில் சென்ற வருவாய்துறையினர் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவரும் அவர்கள் பணிபுரியும் இடத்துக்குள் உள்ள போலீஸ் நிலைய கட்டுபாட்டுக்குள் உள்ள நிலைமையை உன்னிப்பாக கவனிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+