ராமச்சந்திர ஆதித்தன் மரணம் பத்திரிக்கைத் துறைக்கு பேரிழப்பு - ஜெ.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
பிரபல பத்திரிகை அதிபரும், மாலை முரசு நாளிதழின் நிர்வாக ஆசிரியருமான பா.ராமச்சந்திர ஆதித்தன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக போற்றப்படும் பத்திரிகைத் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவம் ராமச்சந்திர ஆதித்தனுக்கு உண்டு. மாலை முரசு நாளிதழின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கிய ராமச்சந்திர ஆதித்தன், பாமர மக்களும் செய்திகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் செய்திகளை வெளியிட்டு பத்திரிகை உலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்றார்.
கண்மணி மாத நாவல், பொன்மணி மாத இதழ் ஆகியவற்றை நடத்தி வரும் ராமச்சந்திர ஆதித்தன், கதிரவன் என்ற நாளிதழையும், தேவி என்ற வார இதழையும் சிறிது காலம் நடத்தி வந்தார்.
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியை மீட்டெடுப்பதற்காக இவர் ஆற்றிய பங்கினை நான் நன்கு அறிவேன். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், மக்களிடையே நாட்டு நடப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் பெரிதும் துணை புரிந்தவர் ராமச்சந்திர ஆதித்தன்.
எளிமையானவரும், பழகுவதற்கு இனிமையானவருமான ராமச்சந்திர ஆதித்தனின் மறைவு பத்திரிகைத் துறைக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.
பா.ராமச்சந்திர ஆதித்தனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பத்திரிகை துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications