'ஐயா' மக்களை படி, படின்னு சொன்னார், 'அம்மா'வோ குடி, குடி என்கிறார்: குஷ்பு
திருவள்ளூர்: காமராஜர் மக்களை படி, படி என்று கூறினார். ஆனால் ஜெயலலிதாவோ குடி, குடி என்கிறார் என நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வி.ஜி.ராஜேந்திரனுக்கு ஆதரவாக நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,

திமுக ஆட்சி
திமுக ஆட்சிக்கு வந்த கையோடு திருவாலங்காட்டில் செயல்பட்டு வரும் சர்க்கரை ஆலை ஊழியர்களின் பணி நிரந்தரம் செய்யப்படும். மேலும் திருவள்ளூரில் மேம்பாலம் அமைக்கப்படும். கருணாநிதி சொன்னதை செய்வார், செய்வதை தான் சொல்வார்.
திட்டங்கள்
கடந்த திமுக ஆட்சியில் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு விவசாயக் கடனை கருணாநிதி தள்ளுபடி செய்தார். பெண்கள் சுயமாக இருக்க உதவியாக திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் ஜெயலலிதா அந்த திட்டத்தை முடக்கிவிட்டார்.
அதிமுக தேர்தல் அறிக்கை
அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளது. இலவச செல்போன் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது நிச்சயம் ஏமாற்று வேலையே. அதிமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. வெள்ள நேரத்தில் கூட ஜெயலலிதா மக்களை சந்திக்கவில்லை.
காமராஜர்
காமராஜர் மக்களை படி, படி என்று கூறினார். ஆனால் ஜெயலலிதாவோ குடி, குடி என்கிறார். வரும் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். கருணாநிதி 6வது முறையாக முதல்வர் ஆவார்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications