அ.தி.மு.க. சார்பில் மே தின கூட்டங்கள்: தொழிலாளர்களுக்கு நிதி உதவி - ஜெ. அறிவிப்பு!

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
''உழைக்கும் வர்க்கம் உரிமை பெற்ற திருநாள் "மே" தினம். ஓய்வு என்பதும், மகிழ்வு என்பதும் உழைக்கும் தொழிலாளர்களுக்கும் உண்டு என்று உரிமைக் குரல் எழுப்பி அதில் வெற்றி பெற்ற நாள் "மே" தினம். அந்த வெற்றியைத் தொடர்ந்து, உழைக்கும் தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் அனைத்து வளங்களும் பெற்று சிறப்படைய வேண்டும்; உலக முன்னேற்றத்துக்காக தங்கள் ரத்தத்தை வியர்வையாக்கி உழைக்கும் அனைத்துத் தொழிலாளர்களின் வாழ்விலும் நல்வாழ்வுத் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு உலகெங்கும் மே முதல் நாள், "மே தினமாக" சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
"மே" தினக் கொண்டாட்டங்கள் மூலம் தொழிலாளர்களின் பெருமையை உலகிற்கு பறை சாற்றுவதோடு நின்று விடாமல், உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகள் உலகெங்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், வரலாற்றுச் சிறப்பு மிக்க "மே" தினத்தைக் கொண்டாடும் வகையில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும், 1.5.2014 வியாழக்கிழமை அன்று "மே" தின விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள் மற்றும் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் கழக நாளேட்டில் வெளியிடப்படுகிறது.
கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்த மாவட்டங்களில் நடைபெறும் "மே" தின விழா பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.
உழைப்போர் திருநாளாம் "மே" தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும், அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியுதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும், போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற் சங்கங்களில் இருந்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட 106 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா 50,000 ரூபாய் வீதம், மொத்தம் 53 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும்.
அண்ணா தொழிற் சங்கத்தைச் சேர்ந்த நிதியுதவி பெற உள்ள நலிந்த தொழிலாளர்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது. இவர்களுக்கான நிதியுதவி வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications