எதிரிகளையும் காத்து ஜெயலலிதா பூமாதேவியாக இருக்கிறார்: நாஞ்சில் பி.சி. அன்பழகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிரிகளுக்கும் பாதுகாப்பு அளித்து பொறுமையில் பூமாதோவியாக முதல்வர் ஜெயலலிதா இருக்கிறார் என்று அதிமுக நட்சத்திர பேச்சாளர் டைரக்டர் நாஞ்சில் பி.சி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.-இன் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக நட்சத்திர பேச்சாளர் டைரக்டர் நாஞ்சில் பி.சி. அன்பழகன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

Jaya is like mother earth in patience: Says Nanjil P.C. Anbazhagan

அப்போது அவர் கூறுகையில்,

சுனாமியால் வீடுகளை இழந்து நின்ற 10 ஆயிரம் குடும்பத்தாருக்கு வீடு கட்டித் தந்தவர் ஜெயலலிதா. மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது போர்க்கால அடிப்படையில் உதவி செய்து சென்னை மக்களின் துயர் துடைத்தவர். தன்னை கிண்டல் செய்யும் எதிரிகளையும் பாதுகாத்து அவர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பொறுமையில் பூமாதேவியாக அவர் உள்ளார்.

அதிமுகவில் கோடிக்கணக்கான இளைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். புரட்சித் தலைவியின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் தரும் வகையில் கட்சி இளைமைத் துடிப்புடன் மார்க்கண்டேயத்தனத்துடன் செயல்படுகிறது. வரும் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்.

ஊழல் இல்லா நல்லாட்சியை அளித்துக் கொண்டிருப்பவர், அளிக்கப் போகிறவர் புரட்சித் தலைவி மட்டுமே. அவரின் நல்லாட்சி தொடர மக்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிமுகவை மாபெரும் வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+