பொங்கலையொட்டி இலவச வேட்டி, சேலை திட்டத்தை துவக்கி வைத்த ஜெயலலிதா
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா துவங்கி வைத்தார்.
தமிழர் திருநாளான பொங்கலையொட்டி மாநில அரசு ஆண்டுதோறும் இலவச வேட்டி, சேலை வழங்கி வருகிறது. 1983ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்.-ஆல் துவக்கி வைக்கப்பட்ட இலவச வேட்டி, சேலை திட்டம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்ட துவக்க விழா தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா திட்டத்தை துவங்கி வைத்தார்.
அவர் 5 ஏழை குடும்பங்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார். 2016ம் ஆண்டு 1 கோடியே 68 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு அரசுக்கு ரூ. 4 கோடியே 36 லட்சம் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் உத்தரவுப்படி இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2014ம் ஆண்டில் இருந்து பாலிகாட் சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications