இளைஞர்-இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளை கூண்டோடு மாற்றிய ஜெயலலிதா
சென்னை: வேலூர், திருச்சி, புதுக்கோட்டை, காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் இளைஞர்- இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளை மாற்றி முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
வேலூர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.டி.குமாரும் (இவர் ஏற்கனவே வகித்து வரும் திருப்பத்தூர் நகர செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்), திருப்பத்தூர் நகர இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.டி.சி.சங்கரும், திருச்சி புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைத்தலைவர் பொறுப்பில் இருக்கும் வி.டி.எம். அருண் நேரு, செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஜி.அருண் செந்தில் ராம், புதுக்கோட்டை மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.ராஜசேகர், காஞ்சீபுரம் மேற்கு மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய ஜெயலலிதா பேரவைச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.சிவக்குமார் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாநில துணை நிர்வாகிகளாகவும், தென் சென்னை தெற்கு, வேலூர் மேற்கு, கடலூர் மேற்கு, விழுப்புரம் தெற்கு, திருச்சி புறநகர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாநகர் ஆகிய மாவட்டங்களின் மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகளாகவும் கீழ்கண்டவர்கள் கீழ்காணும் பொறுப்புகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள்.
அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் இணைச் செயலாளர் கே.பி.ஆனந்த் (பென்னாகரம்), துணைச்செயலாளர்கள் என்.சின்னத்துரை (தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் தலைவர்), பி.சிவக்குமார் (ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர்), தென் சென்னை தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்ட இணைச் செயலாளர் ஜே.எம்.பஷீர், வேலூர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் மாவட்டச்செயலாளர் டி.டி.சி.சங்கர், மாவட்ட இணைச் செயலாளர் டி.டி.ஆர்.ரகு (தோட்டப்பாளையம், வேலூர்)
கடலூர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர் டி.ஏ.என்.கே. ஆர்.சண்முகம், விழுப்புரம் தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்ட இணைச்செயலாளர் பி.வஜ்ரவேல், திருச்சி புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்டச்செயலாளர் வி.டி.எம்.அருண்நேரு, அரியலூர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஆர்.ஈ.ஏ.டி. செல்வம் (ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், ஆண்டிமடம்).
புதுக்கோட்டை மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பி.கருப்பையா, ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஆர்.பால்பாண்டி, திருநெல்வேலி மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கே.துரைபாண்டியன்.
தொண்டர்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜெயலலிதா வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
கோவில்பட்டி நகர செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.சங்கரபாண்டியன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கோவில்பட்டி நகர செயலாளர் பொறுப்பில் எஸ்.விஜயபாண்டியன் நியமிக்கப்படுகிறார். அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருக்கும் மருதமுத்து நீக்கப்பட்டு, ஒன்றிய செயலாளர் பொறுப்பில் ஜெயகுமார் (மாணவர் அணி செயலாளர்) நியமிக்கப்படுகிறார்.
காஞ்சீபுரம் மத்திய மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.விஜயபாஸ்கர் டி.கே.விநாயகம், திருப்போரூர் ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருக்கும் பொன்னுரங்கம் ஆகியோர் அவரவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications