For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு அதிகாரிகள் மருத்துவர்களுடன் ஜெ,. பேசினார்!

அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுடன் ஜெயலலிதா பேசினார் என்று எய்ம்ஸ் குழுவின் அறிக்கையை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்ட தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Vazhmuni
Google Oneindia Tamil News

சென்னை :அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுடன் ஜெயலலிதா பேசினார் என்று எய்ம்ஸ் குழுவின் அறிக்கையை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்ட தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான எய்ம்ஸ் குழுவின் அறிக்கை, அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை ஆகியவற்றையும் இவற்றை முன்வைத்து மற்றொரு அறிக்கையையும் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

Jaya spoke well with officers and Doctors says AIIMS report

அதில் செப்.22ல் மூச்சுத்திணறல் காரணமாக இரவு 10 மணிக்கு ஜெயலலிதா மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீர்ச்சத்து குறைவு, நீரிழிவு உள்ளிட்ட பிரச்னைகளால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன் பரிந்துரைக்கப்பட்ட மருந்தை சாப்பிட்டார்.

[ஜெ. சிகிச்சை: தமிழக அரசு வெளியிட்ட அப்பல்லோ மருத்துமனை. எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கைகள்]

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சைக்கு நல்ல முன்னேற்றம் இருந்தது.ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது காவிரி விவகாரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் அரசு அதிகாரிகள் மருத்துவர்களுடன் ஜெயலலிதா பேசினார் .

கடந்த டிசம்பர் 4ம் தேதி, அப்போலோ அறையில் இருந்த போது திடிரென ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஜெயலலிதாவுக்கு இதய, நரம்பியல் செயல்பாட்டில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலை இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Former chief minister jayalalithaa spoke well with the govt officers and Doctors says AIIMS report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X