அட கொடுமையே.. வீடியோ கான்பரன்சிங்கில் கலெக்டர் அலுவலகத்தை திறந்த ஜெ.வுக்கு 2 கி.மீ வாழை மர வரவேற்பு
திருப்பூர்: சென்னையில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலமாக திருப்பூரில் கட்டப்பட்டுள்ள புதிய கலெக்டர் அலுவலக கட்டடத்தைத் திறந்து வைத்த முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்று திருப்பூரில் 2 கிலோமீ்ட்டர் தூரத்திற்கு வாழை மரங்களை நிறுத்தி வைத்து அதிமுகவினர் செய்த அட்டகாசத்தால் பொதுமக்கள் பெரும் கொதிப்புக்குள்ளானார்கள்.
அதை விட பெரிய கொடுமை என்னவென்றால், ஒரு குளத்தை ஆக்கிரமித்துத்தான் இந்த கலெக்டர் அலுவலக கட்டடமே கட்டப்பட்டுள்ளது என்பதுதான். சென்னையில் இருந்தபடி திறந்து வைக்கும் ஜெயலலிதாவை வரவேற்று எதற்கு இத்தனை அமர்க்களம், ஆர்ப்பாட்டம் என்று மக்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டடம் கட்டும் பணி, பல்லடம் ரோடு எல்.ஆர்.ஜி கல்லூரி பின்புறம் உள்ள குளத்தை ஆக்கிரமித்து, ரூ.52.14 கோடியில் 2012ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியபோதும் அதை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் தாண்டி, தரைத்தளம் மற்றும் ஏழு தளம், ஐந்து கூட்ட அரங்கு, வி.ஐ.பி. அறைகளுடன் கட்டுமான பணியை முடித்தனர்.
முதல்வர் ஜெயலலிதா இந்தக் கட்டடத்தை நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். ஆனால் அதிமுகவினர் திருப்பூரில் செய்த அட்டகாசம்தான் தாங்க முடியவில்லை.
கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தூரம் வரை சாலையின் இருபுறமும் அதிமுக கொடி, தோரணத்தை கட்டி வைத்தனர். வாழை மரங்களை வெட்டி கொண்டு வந்து, சாலையின் இருபுறமும் கம்பங்களில் கட்டி வைத்தனர். ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகளை விளக்கி பிளக்ஸ் போர்டுகளும் கண்ணைப் பறிக்கும் வண்ணம் ஜொலித்தன. அதுபோக, அம்மா, அம்மா என்று ஜெயலலிதாவை வாழ்த்தும் பேனர்களும் நகர் முழுவதும் பளிச்சிட்டது.
மொத்தத்தில் இந்த அட்டகாச ஆடம்பரத்தால் பல்லடம் சாலையில் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளானது. திருப்பூர் நகரிலும் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்து விட்டனர் அதிமுகவினர்.
நாடு வெளங்கும்??
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications