சசிகலா அரசியலுக்கு வருவதை ஜெயலலிதாவே விரும்பவில்லை: சசிகலா புஷ்பா பொளேர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா நடராஜன் அரசியலுக்கு வரக் கூடாது என நினைத்தவர் ஜெயலலிதா என்று, சசிகலா புஷ்பா தெரிவித்தார்.

மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா சென்னையில் அளித்த பேட்டி: ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவை வழிநடத்தப்போவது யார். அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி கட்சியினரிடையேயும், பொதுமக்களிடையேயும் பேசப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா எந்த இடத்திலேயும் சசிகலா நடராஜன் தலைமை ஏற்க வேண்டும் என்று விரும்பவில்லை. வெளிப்படுத்தவும் இல்லை. அரசியலில் சசிகலா வருவதை விரும்பியதே கிடையாது.

மர்மம்

மர்மம்

ஜெயலலிதாலவின் இறப்பு இன்னும் சரியாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. ஜெயலலிதா என்றைக்கு பொதுமக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ, அன்று முதல் அவர் மக்கள் சொத்து. அப்படிப்பட்ட மக்கள் சொத்தாகிய பெண் முதல் அமைச்சருக்கு என்ன நேர்ந்தது என்பதையே இன்னும் மக்களிடத்தில் வெளிப்படையாக தெரிவிக்கப்படாத நிலையில், அடுத்ததாக இவர் வரப்போகிறார். அவர் வரப்போகிறார் என்று செய்திகள் வேடிக்கையாக உள்ளது.

நீதி விசாரணை

நீதி விசாரணை

எதற்காக ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். என்ன நேர்ந்தது அவருக்கு வீட்டில். எதனால் ஆளுநர், அமைச்சர்கள் யாரும் ஜெயலலிதாவை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. அவருக்கு 75 நாட்கள் என்ன சிகிச்சை கொடுக்கப்பட்டது. அவருக்கு என்ன மாதிரியான உணவுகள் வழங்கப்பட்டது. இவற்றையெல்லாம் பற்றி ஒரு நீதி விசாரணை வேண்டும் என்பதுபோன்ற வழக்குகளெல்லாம் நான் தொடுக்க இருக்கிறேன்.

சந்தேகம்

சந்தேகம்

ஜெயலலிதா ஒரு பெண்ணாக இருந்து கொண்டு அரசியலில் யாருமே சாதிக்க முடியாத தூரத்திற்கு, அவ்வளவு பிரச்சனைகளையும் சமாளித்தவர். ஒரு கட்சிக்கு அப்பாற்ப்பட்டு எல்லாருமே அந்த அம்மாவுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. பாவம்.., என்ற சூழ்நிலைதான் தமிழ்நாட்டில் இருக்கிறது. எல்லோருக்குமே அவருக்கு என்ன நடந்தது என்ற சந்தேகம் உள்ளது.

முதல் கெட்ட பெயர்

முதல் கெட்ட பெயர்

1995ல் சசிகலா நடராஜன் மகனாக கருதப்பட்ட சுதாகரனின் திருமணம் தடாபுடலாக நடத்தப்பட்டபோதுதான், ஜெயலலிதாவுக்கு கெட்டப்பெயர் ஏற்பட்டதாக உணர்கிறேன். ஜெயலலிதாவை பொறுத்தவரை மக்களிடம் பெரிய இமேஜ் இருந்தது. சுதாகரனின் திருமணம் பெரிய கெட்டப் பெயர் ஏற்படுத்தி தந்தது. இதனால் ஆட்சியை இழந்தார். அப்போது சசிகலா மீது கோபப்பட்டார்.

பழி வாங்கப்பட்டாரா

பழி வாங்கப்பட்டாரா

2011ல் சசிகலாவையும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த 16 பேரையும் சதி செய்தார்கள், துரோகம் செய்தார்கள், என்னை கொல்லப்பார்த்தார்கள், என்னுடைய ஆட்சியை துரோகம் செய்து கவிழ்க்க பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டி ஜெயலலிதாவே அவர்களை வெளியே அனுப்பினார்கள். அதற்கு பழிவாங்கப்பட்டார்களா ஜெயலலிதா என்று மக்களிடையே கேள்வி எழுந்து கொண்டிருக்கிறது.

பதவிக்கு ஆசை

பதவிக்கு ஆசை

என் குடும்பம் துரோகம் செய்திருக்கிறது. என் உயிர் உள்ளவரை அக்காவுக்காக சேவைகியாக இருப்பேன். கவுன்சிலர் சீட்டுக்குக் கூட ஆசைப்பட மாட்டேன் என கூறி பிறகு ஜெயலலிதாவுடன் சேர்ந்தவர்தான் சசிகலா. பிறகு இப்போது, ஏன் ஆசைப்படுகிறார்கள் என்று தெரியவில்லை.

5 வருடம் கூட ஆகவில்லை

5 வருடம் கூட ஆகவில்லை

கட்சிக்காரர்களை நான்தான் வந்தாக வேண்டும் என்று சொல்ற அளவுக்கு, கூப்பிட வைக்க வேண்டிய அளவுக்கு என்ன அவசரம் வந்தது. அப்படி பார்த்தால் அதிமுக விதிமுறைப்படி ஒரு பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால் அவர்கள் தொடர்ந்து 5 வருடம் அடிப்படை உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். சசிகலா நடராஜன் 2011ல் துரோகி என்று குற்றம் சாட்டப்பட்டு வெளியே அனுப்பப்பட்டார். 2012ல் மீண்டும் கட்சியின் உள்ளே வருகிறார். அதிலிருந்து பார்த்தால் இன்னும் 5 வருடம் ஆகவில்லை.

ஜெயலலிதாவுக்குத்தான் ஓட்டு

ஜெயலலிதாவுக்குத்தான் ஓட்டு

ஒரு பெண் முதல் அமைச்சர். எந்த நாட்டுக்கும் கிடைக்காத ஒரு பெருமை. இந்தக் கட்சிக்காக இவ்வளவு நாள் போராடி வந்தவர் ஜெயலலிதா. அவர்களுடைய சாவு மக்களால் நல்லதாக பேசப்பட்டிருக்க வேண்டும். அவர்களுடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும். மக்கள் ஓட்டு போட்டுள்ளார்கள். ஜெயலலிதா முதலமைச்சராக வரவேண்டுமென ஓட்டுபோட்டார்களே தவிர, நடுவுல சசிகலா கட்சியை தூக்க வேண்டும், முதலமைச்சராகனும் என்று ஓட்டுப்போடவில்லை. அம்மாவின் முகத்திற்கு கிடைத்த ஓட்டு. வேற யாரையாவது நிறுத்தியிருந்தால் இவ்வளவு ஓட்டு விழுந்திருக்காது. கட்சியில எல்லாருமே குமுறிபோய் இருக்கிறார்கள்.

சொத்துக்கள்

சொத்துக்கள்

ஜெயலலிதாவின் கட்சி மற்றும் சொத்துக்கள் ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கிறது. அந்த சொத்துக்களுக்காகத்தான் பொதுச்செயலாளர் என்ற பதவியை ஒரு கும்பல் பறித்துவிட நினைக்கிறார்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஜெ.வின் ஒரு பைசாவைக் கூட வேறு யாரும் தொடுவதற்கு நான் அனுமதிக்க மாட்டான். என்னால் ஆனவரை, என் உயிர் இருக்கும் வரை போராடுவேன்.

போயஸ் இல்லம்

போயஸ் இல்லம்

போயஸ் கார்டன் வேதா நிலையத்திற்குள் இருப்பதற்கு சசிகலா நடராஜன் யார். ஜெயலலிதா இருந்தபோது அவர்களை வைத்துக்கொண்டார். அவர் மறைவுக்குப் பின்னர் அந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று பேசுகிறோம். வேதா இல்லத்தில் சசிகலா நடராஜன் இன்னும் இருப்பதற்கு யார் அனுமதி கொடுத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+