6வது முறையாக முதல்வராகும் ஜெயலலிதா
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, 6வது முறையாக முதல்வர் பதவியில் அமர்கிறார். இதில் முறைப்படி பார்த்தால் இது 4வது முறைதான். ஆனால் சிறைக்குப் போனது, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் பதவி விலகியது ஆகியவற்றை வைத்துப் பார்த்தால் இது 6வது முறையாக வருகிறது.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் அதிமுக உடைந்தது. அதுவரை கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து வந்த ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியாக அதிமுகவில் பலர் திரண்டனர். ஜானகி அம்மாள் தலைமையில் இன்னொரு அணி உருவானது. இருவரும் தனித் தனி சின்னத்தில் தங்களது முதல் தேர்தலை 1989ம் ஆண்டு சந்தித்தனர். அத்தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா அணி அதிக இடங்களைப் பெற்றது. ஜானகி அணி படுதோல்வியைச் சந்தித்தது.

அதன் பிறகு அதிமுக ஒன்றாக இணைந்தது. ஜெயலலிதா பொதுச் செயலாளரானார். அன்று முதல் இன்று வரை அதிமுகவின் அசைக்க முடியாத தலைவராக திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு முதல் முறையாக ஆட்சியைத் தக்க வைத்த முதல்வராக ஜெயலலிதா உருவெடுத்துள்ளார். இத்தனைக்கும் பெரிய கூட்டணி எதுவும் இல்லாமல் அவர் சாதித்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா 1991ம் ஆண்டு முதல் முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்தார். இந்த ஆட்சி 1996 வரை முழுமையாக நீடித்தது. பிறகு 1996ல் வந்த தேர்தலில் ஊழல் புகார்கள், சொத்துக் குவிப்பு புகார்கள் காரணமாக அதிமுக படு தோல்வி அடைந்தது.
அதன் பின்னர் 2001ம் ஆண்டு மீண்டும் அதிமுக வெற்றி பெற்று முதல்வரானார் ஜெயலலிதா. ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து அவர் பதவி விலக நேரிட்டது. இதையடுத்து 2002ல் மீண்டும் அவர் 3வது முறையாக முதல்வர் பதவியை ஏற்றார். 2011ல் நடந்த தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து ஜெயலலிதா 4வது முறையாக முதல்வரானார்.
இந்த முறை சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அவர் 2014ல் பதவியை இழந்தார். ஆனால் 2015ல் அவர் வழக்கிலிருந்து விடுதலையானதால் ஆர்.கே,நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று 5வது முறையாக முதல்வர் பதவியை ஏற்றார்.
தற்போது 6வது முறையாக முதல்வர் பதவியை வகிக்கப் போகிறார். ஜெயலலிதாவின் இந்த வெற்றியை அதிமுகவினர் மாநிலம் எங்கும் கொண்டாடி வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications