96 தமிழக மீனவர்களை இலங்கையிலிருந்து விடுவிக்க நடவடிக்கை.. மோடிக்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை: இலங்கை சிறைகளில் உள்ள 99 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.
இதுகுறித்த அவரது கடிதத்தில், "புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 3 மீனவர்களை இலங்கை கடற்படையினரால் 23.3.16 அன்று பிடித்து கடத்தி சென்று விட்டது பற்றி உங்கள் கவனத்துக்கு கொண்டு வர நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். நான் பல தடவை வேண்டுகோள் விடுத்தும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கடத்தப்படுவதைத் தடுக்க மத்திய அரசு எந்த ஒரு உறுதியான நடவடிக்கையும் எடுக்காதது வருத்தத்தை அளிக்கிறது.

தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக்ஜலசந்தியில் தொடர்ந்து மீன் பிடிப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும். இதற்காக 1974, 1976 ஆம் ஆண்டுகளில் இலங்கையுடன் போட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்.
கச்சத்தீவையும் இலங்கையிடம் இருந்து இந்தியா திரும்பப் பெற வேண்டும். மேலும் இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே நீண்ட காலமாக உள்ள மீன்பிடி பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும். 23.3.16 அன்று இலங்கை கடற்படையால் கடத்தி செல்லப்பட்ட 1 எந்திரப்படகு உள்பட தற்போது தமிழக மீனவர்களின் 83 எந்திர படகுகள் இலங்கை கட்டுப்பாட்டில் உள்ளன. நீண்ட நாட்களாக பயன்படுத்தாத காரணத்தாலும், பருவ மழை காலத்தில் நனைந்த காரணத்தாலும் அந்த படகுகள் சேதம் அடைந்துள்ளன.
83 படகுகளையும் உடனடியாக இலங்கையிடம் இருந்து மீட்க வேண்டும். மேலும் தாங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு இலங்கை சிறைகளில் உள்ள 99 தமிழக மீனவர்களையும் வெளியுறவு துறை அமைச்சகம் மூலம் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா?












Click it and Unblock the Notifications