ஜெயலலிதாவுக்கு பிறகு பராமரிக்கப்படாத போயஸ் கார்டன் பங்களா.... அதிர்ச்சியில் தொண்டர்கள்
ஜெயலலிதா மறைந்த பிறகு அவரது போயஸ் கார்டன் இல்லம் பராமரிக்கப்படாமல் பொலிவற்ற நிலையில் காணப்படுகிறது.
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது போயஸ் கார்டன் பங்களா பராமரிக்காமல் தற்போது களையிழந்துள்ளது தொண்டர்களை மட்டுமல்லாமல் பொதுமக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் தாய் சந்தியாவால் போயஸ் தோட்டத்தில் உள்ள இல்லம் 1970-களில் வாங்கப்பட்டது. இன்று போயஸ் தோட்டம் என்றாலே ஜெயலலிதாவின் இல்லம் என்ற அளவுக்கு பெயர் பெற்றுள்ளது.

போலீசார்
ஒரு காலத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு அந்த சாலையே அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. ஜெயலலிதாவின் வீட்டையோ அல்லது அந்த தெருவையோ யாராவது ஒரு விநாடிக்கு உற்று நோக்கினால் போதும், உடனே அவர்களை பிடித்து 1008 கேள்விகளை போலீஸார் கேட்டு துளைத்தெடுப்பர்.

பூஜைகள் இல்லை
ஜெயலலிதா உயிருடன் இருந்த போது அந்த வீட்டில் எப்போதும் பக்தி மணம் கமழும். அன்றாடம் பூஜைகள், யாகங்கள், புனஸ்காரங்கள் என களைகட்டும். ஆனால் தற்போது அப்படி இல்லை.

தினகரன் எஸ்கேப்
ஜெயலலிதா வீட்டை அபகரித்திருந்த சசிகலா சிறைக்குப் போய்விட்டார். சிறிது காலம் போயஸ் கார்டன் பங்களாவில் இருந்த டிடிவி தினகரனும் இப்போது பெசன்ட் நகர் வீட்டுக்குப் போய்விட்டார். அங்குதான் அனைத்து சந்திப்புகளும் நடைபெறுகின்றன.

கைவிடப்பட்ட பங்களா
ஜெயலலிதாவின் இல்லம் இப்போது கைவிடப்பட்டதாகவே இருக்கிறது. போயஸ் கார்டன் பங்களாவில் இருந்த சில மரங்களும் காய்ந்துவிட்டன. ஏற்கனவே ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவில்லமாக மாற்ற வேண்டும் என ஓபிஎஸ் அணியினர் வலியுறுத்தி வருகின்றனர். அந்த கோரிக்கை நிறைவேறுவதற்குள் ஜெயலலிதாவின் பங்களா என்னவாகுமோ என்பதுதான் அதிமுக தொண்டர்களின் கவலை.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications