ஸ்டாம்ப் சைஸ் முதல் ஏ4 சைஸ் வரை ஜெ. ஸ்டிக்கர்...: இது நொந்து நூடுல்ஸ் ஆனவரின் அனுபவம்
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து உதவிக்கரங்கள் நீள்கின்றன. வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் தானாக முன்வந்து நிதிஉதவியும், நிவாரண பொருட்களும் அளித்து வருகின்றனர். தன்னார்வலர்கள் பலரும் அதிமுக குண்டர்களால் அடித்து உதைக்கப்படுகின்றனர். அவர்களிடம் இருந்து நிவாரணப் பொருட்கள் அடித்து பிடுங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு நிவாரண பொருட்களை எடுத்து வந்த ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவர், அதிமுகவினரால் தனக்கு நேர்ந்த அனுபவத்தை நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அதை அப்படியே உங்களுக்கு தருகிறோம்.
''நானும் சில நண்பர்களும் ரூ. 25,000 மதிப்புள்ள பொருட்களை பெங்களூரில் திரட்டினோம். இதை ஸ்விப்ட் காரில் சென்னைக்கு கொண்டு சென்றோம். அந்தப் பொருட்கள் பட்டபாடு இது..
பிஸ்கெட், சானிட்டர் நாப்கின், போர்வைகள், மெழுகுவர்த்தி, தண்ணீர், மருந்துகள், பிரட், குழந்தைகளுக்கான டயாப்பர்கள், கொசுவத்தி, தீப்பெட்டி, பால் பவுடர் ஆகியவை இதில் அடக்கம்.

ஒரு வழியாக சென்னைக்குள் போய் 2 போட்டை வாடகைக்குப் பிடித்து முடிச்சூர், பள்ளிக்கரணை, கேகே நகர் பகுதிகளில் நிவாரணப் பகுதிகளில் வினியோகிக்க திட்டமிருந்தோம்.
போட்டுக்கு செம டிமாண்ட். அதை 6000 ரூபாய்க்கு பேரம் பேசி அழைத்துக் கொண்டு கிளம்பினால் அதைத் தடுத்து பல மணி நேரம் நிறுத்தி வைத்தனர் அதிமுகவினர். காரணம், நாங்கள் கொண்டு சென்ற பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக.
பள்ளி மாணவர்கள் கூட ஆட்களை வரிசையில் நிற்க வைக்க உதவினர். ஆனால், உங்களுக்கு இந்த ஏரியா தெரியாது. வினியோகிக்க உதவி செய்ய ஆள் வருது, ஆள் வருதுனு சொல்லி பல மணி நேரம் நிற்க வைத்தனர் அதிமுகவினர். கடைசியில் பல சைஸ் ஸ்டிக்கர்களுடன் வந்து எல்லா பொருட்கள் மீதும் ஒட்டி விட்டு இப்போ போய் தாங்க என்று விரட்டினர்.

பொருளுக்கு தக்கவாறு ஸ்டிக்கர் சைஸ் வேற... ஸ்டாம்ப் சைஸ் முதல் ஏ4 சைஸ் ஸ்டிக்கர் வரை தயாராக வைத்துள்ளது இந்த கும்பல்.
எங்களைப் போலவே மக்களுக்கு பிஸ்லெரி வாட்டர் பாட்டில்களைக் கொண்டு வந்தவர்களிடம் அதைப் பறித்துக் கொண்டு அம்மா வாட்டர் பாட்டிலை கொடுத்து அனுப்பினர்.
பிஸ்லெரியும் கொடுத்திருக்கலாம், அம்மா வாட்டர் பாட்டிலையும் மக்களுக்குக் கொடுத்திருக்கலாமே.
தண்ணீருக்கு தவிப்போடும், பசித்த வயிறுடனும் காத்திருக்கும் மக்களுக்கு உணவளிக்கச் சென்றால் இப்படி ஸ்டிக்கர் ஒட்டி காலத்தை விரயம் செய்தனர் அதிமுகவினர்.
இவர் கொடுத்து வைத்தவர் அடி வாங்காமல் வந்துவிட்டார். பாவம் பெங்களூரில் இருந்து சென்ற இன்னொரு தன்னார்வல குழுவினரைத் தான் அதிமுகவினர் புரட்டி புரட்டி அடித்தனர். காரணம், அவர் கொண்டு வந்த பொருட்களை அதிமுகவினரிடம் தராதது.
அதாவது அடுத்தவன் காசில் இந்தக் கும்பலுக்கு ஓ.சியில் விளம்பரம் வேணும்.. இவர்கள் பளீர் வெள்ளை வேட்டி- சட்டையில் கமிஷன்- கொள்ளை மட்டும் அடிப்பார்கள்.
கொள்ளையடித்த காசில் கூடவா ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கித் தர முடியாது?












Click it and Unblock the Notifications